முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் தீபாவளியன்று பட்டாசு வெடித்தால் சிறை : சுற்றுச்சூழல் அமைச்சர் எச்சரிக்கை

புதன்கிழமை, 19 அக்டோபர் 2022      இந்தியா
Gopal-Roy 2022-10-19

தலைநகர் டெல்லியில் தீபாவளியன்று பட்டாசு வெடித்தால் சிறை தண்டனை என்று அம்மாநில சுற்றுச்சூழல் அமைச்சர் எச்சரித்துள்ளார்.

தலைநகர் டெல்லி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில தினங்களாக காற்றின் தரம் அபாய அளவை தாண்டி மிக மோசமான நிலையில் உள்ளது. டெல்லி தேசிய தலைநகர பிராந்தியத்தில் (டெல்லி என்சிஆர்) காற்று மாசை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் பட்டாசு புகையால் காற்றின் தரம் பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் அபாயகரமான நிலைக்கு செல்லும் என கூறப்படுகிறது. இதனால், டெல்லியில் பட்டாசு வெடிப்பதற்கும், விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டெல்லி தேசிய தலைநகர பிராந்தியத்தில் தீபாவளியன்று பட்டாசு வெடித்தால் 6 மாதம் வரை சிறைத் தண்டனையும் ரூ.200 அபராதமும் விதிக்கப்படும் என்று சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியதாவது:-

தலைநகரில் பட்டாசு தயாரித்தல், பதுக்கி வைத்தல் மற்றும் விற்பனை செய்தால் வெடிபொருள் சட்டத்தின் 9பி பிரிவின் கீழ், 5,000 ரூபாய் வரை அபராதமும், 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்படும். கடந்த 2 ஆண்டுகளாக கடைபிடித்து வரும் தீபாவளி உள்ளிட்ட அனைத்து பண்டிகைகளிலும் பட்டாசுகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாட்டிற்கு ஜனவரி 1-ஆம் தேதி வரை முழுமையான தடை உத்தரவை கடந்த செப்டம்பர் மாதம் மீண்டும் விதிக்கப்பட்டது.

 

ஒளியை ஏற்றுங்கள் பட்டாசுகளை அல்ல.. என்ற பொது விழிப்புணர்வு பிரச்சாரம் அக்டோபர் 21ம் தேதி அன்று தொடங்கப்படும். அதன்படி, டெல்லி அரசு வரும் வெள்ளிக்கிழமை கனாட் பிளேஸில் உள்ள சென்ட்ரல் பூங்காவில் 51,000 தீபங்கள் ஏற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து