முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

பேபி கார்ன் கிரேவி 

Cooking time in minutes: 
20
Ingredients: 

பேபி கார்ன் கிரேவி  செய்யத் தேவையான பொருள்கள்

  1. பேபி கார்ன் – 12.
  2. கடுகு,உளுந்தம் பருப்பு - சிறிதளவு.
  3. பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1.
  4. பொடியாக நறுக்கிய தக்காளி – 1.
  5. பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு.
  6. பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு.
  7. இஞ்சி பூண்டு விழுது  - 1/4 ஸ்பூன்.
  8. மிளகாய் தூள் - 1/4 ஸ்பூன்.
  9. கறி மசாலா தூள் - 1/4 ஸ்பூன்.
  10. சோம்பு தூள் - 1/4 ஸ்பூன்.
  11. மல்லி தூள் - 1/4 ஸ்பூன்.
  12. மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்.
  13. சீரகத்தூள் - 1/4 ஸ்பூன்.
  14. ரிபைன்ட்  ஆயில் - 5 ஸ்பூன்.
  15. சில்லி சாஸ் -  1ஸ்பூன்.
  16. சோயா சாஸ் -  1ஸ்பூன்.
  17. மிளகுத்தூள் - 1/4 ஸ்பூன்.
  18. தக்காளி சாஸ்  -  1ஸ்பூன். 
  19. உப்பு - தேவையான அளவு.
Method: 

செய்முறை ;

  1. அடுப்பில் கடாய் வைத்து 5 ஸ்பூன் ரிபைன்ட் ஆயில் ஊற்றவும்.
  2. எண்ணெய் சூடானவுடன், சிறிதளவு கடுகு மற்றும் சிறிதளவு உளுந்தம் பருப்பை போட்டு வதக்கவும்.
  3. பொடியாக நறுக்கிய சிறிதளவு கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய சிறிதளவு கொத்தமல்லி ,பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம்  மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
  4. இதனுடன் பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி மற்றும் 1/4 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது  போட்டு நன்றாக வதக்கவும்.
  5. இதனுடன் மிளகாய் தூள் 1/4 ஸ்பூன்,கறி மசாலா தூள் 1/4 ஸ்பூன்,சோம்பு தூள் 1/4 ஸ்பூன்,மல்லி தூள் 1/4 ஸ்பூன்,மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்,சீரக தூள் 1/4 ஸ்பூன் போட்டு நன்றாக வதக்கவும்.
  6. இதனுடன் சுத்தம் செய்து நறுக்கி வைத்த 12 பேபி கார்ன்  போட்டு கிளறி விடவும்.
  7. இதில் சில்லி சாஸ்  ஒரு ஸ்பூன்,சோயா சாஸ் ஒரு ஸ்பூன், மிளகுத்தூள் 1/4 ஸ்பூன், 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கலந்து விட்டு 10 நிமிடம் முடி வேக விடவும்.
  8. ஒரு ஸ்பூன் தக்காளி சாஸ்  ஊற்றி கலந்து விடவும்.
  9. பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சிறிதளவு போட்டு இறக்கவும்.
  10. சுவையான பேபி கார்ன் கிரேவி ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 4 days ago