முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாரதீய ஜனதாவில் இருந்து விலகினார் திருச்சி சூர்யா

செவ்வாய்க்கிழமை, 6 டிசம்பர் 2022      அரசியல்
Surya 2021 12-06

பா.ஜ.க.வில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட திருச்சி சூர்யா, அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 

கட்சி பொறுப்புகளில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருந்த நிலையில், பா.ஜ.க.வுடனான உறவை முடித்து கொள்வதாக சூர்யா தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அண்மையில் பா.ஜ.க. பெண் நிர்வாகியிடம் தொலைபேசியில் ஆபாசமாக திருச்சி சூர்யா பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. 

இது தொடர்பாக நடவடிக்கை எடுத்த தமிழக பா.ஜ.க. தலைமை, திருச்சி சூர்யா பா.ஜ.க.வின் அனைத்து பொறுப்புகளில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அறிவித்தது. இந்த நிலையில், பா.ஜ.க.வில் இருந்து விலகுவதாக திருச்சி சூர்யா அறிவித்துள்ளார். மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகத்தை மாற்றினால் மட்டுமே பா.ஜ.க. வளரும் எனவும் அவர் தனது விலகல் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து