முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

ரவா உப்புமா போண்டா

Cooking time in minutes: 
30
Ingredients: 
ரவா உப்புமா போண்டா செய்யத் தேவையான பொருள்கள்;
ரவை - 3/4 கப். 
பொடியா நறுக்கிய வெங்காயம் - 1/2 கப். 
பச்சை மிளகாய் - 3 .
இஞ்சி - சிறிதளவு.
கறிவேப்பிலை - 25.
கடுகு உளுந்து  - 1 ஸ்பூன். 
உப்பு -  தேவையான அளவு.
கடலை மாவு - 1 கப். 
ஒமம் - 1 ஸ்பூன். 
சுக்கு பவுடர் - 1/2 ஸ்பூன்.  
எண்ணெய் 1/2 லிட்டர்.
Method: 

செய்முறை ;

  1. அடுப்பில் கடாய் வைத்து  3/4 கப் ரவையை போட்டு பச்சை வாசனை போகும் வரை நன்றாக வறுத்து வைத்துக்கொள்ளவும். 
  2. அடுப்பில் கடாய் வைத்து 4 ஸ்பூன் எண்ணெய்யை ஊற்றவும் எண்ணெய் சூடானவுடன் 2 ஸ்பூன் கடுகு, உளுந்து போட்டு வதக்கவும்.
  3. பொடியா நறுக்கிய சிறிதளவு இஞ்சி,பொடியா நறுக்கிய 3 பச்சை மிளகாய்,பொடியா நறுக்கிய கருவேப்பிள்ளை மற்றும் 1/2 கப் வெங்காயத்தை போட்டு 2 நிமிடம் நன்றாக வதக்கவும்.
  4. இதில்  3 டம்ளர் தண்ணீர் ஊற்றி  தேவையான அளவு உப்பு போட்டு கலந்து விட்டு 5 நிமிடம் முடி வேக வைக்கவும் 
  5. 5 நிமிடத்திற்கு பின் முடியை திறந்து வறுத்த ரவையை போட்டு கிளறிவிடவும்,இப்போது உப்புமா ரெடியாகி விட்டது இதை சிறிது நேரம் ஆற விட்டு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவும். 
  6. ஒரு பாத்திரத்துல் ஒரு கப் கடலை மாவு போட்டு இதனுடன்  ஒரு  ஸ்பூன் ஒமம்,1/2 ஸ்பூன் சுக்கு பொடி,1/4 டீஸ்பூன் பெருங்காய தூள்,தேவையா அளவு உப்பு போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து விட்டு போண்டா மாவை தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
  7. அடுப்பில் கடாய் வைத்து 500 மில்லி எண்ணெய் ஊற்ற வேண்டும்.
  8. எண்ணெய் சூடானவுடன் தயார் செய்து வைத்துள்ள உப்புமா உருண்டையை கரைத்து வைத்துள்ள கடலைமாவில் முக்கி எடுத்து ஒவ்வொன்றாக எண்ணெயில் போட்டு  வறுக்கவும். 
  9. திருப்பி திருப்பி போட்டு வேக விடவும்.
  10. நன்றாக பொரிந்து விட்டது எடுத்து விடலாம்.
  11. சுவையான ரவா உப்புமா போண்டா ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 8 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 8 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 10 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 10 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 8 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 8 hours ago