முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

22 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை: பிரவின்

வெள்ளிக்கிழமை, 15 மார்ச் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.16 - வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்கப்பட்டுள்ள 22 லட்சம் பேருக்கு அடையாள அட்டை விரைவில் வழங்கப்பட்டுவிட்டது என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவின்குமார் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் போது புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 21 லட்சத்து 98 ஆயிரத்து 936 பேருக்கு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்பட்டு விட்டது என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இந்த ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை வழங்கப்பட்டு விட்டது. இந்த திருத்தத்தின் போது 22 லட்சத்து 7 ஆயிரத்து 364 பேர் புதிய வாக்காளர்களாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

இவர்களில் 8 லட்சத்து 60 ஆயிரத்து 655 பேருக்கு கடந்த ஜனவரி 25 -ந் தேதி வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்பட்டது. மீதமுள்ளவர்கள் அந்தந்த வாக்குச்சாவடி அதிகாரிகள் மூலம் பெற்றுக் கொண்டனர். வாக்காளர்கள் இடம் மாறிச் சென்றது, வாக்காளர் மரணம் போன்ற பல்வேறு காரணங்களால் 8 ஆயிரத்து 428 பேருக்கு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்படவில்லை.

இந்த தகவல் சூசூசூ.டீங்டீஷசிடுச்டூஙூ.சிடூ.கிச்சு.டுடூ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை தொடர்பாக வாக்காளர்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் அந்தந்த பகுதியில் உள்ள வாக்குப்பதிவு அதிகாரிகள், துணை வாக்குப்பதிவு அதிகாரிகள், வாக்குச்சாவடி அதிகாரிகளை  தொடர்பு கொள்ளலாம். வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைக்கான மையங்கள், வாக்குப்பதிவு அதிகாரிகள், விபரங்கள் மேற்காணும் இணையளதளத்தில் இடம் பெற்றுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்