முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ முடியும்: நாசா

சனிக்கிழமை, 16 மார்ச் 2013      உலகம்
Image Unavailable

 

நியூயார்க், மார்ச். 17 - செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வதற்கு தேவையான தாது பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வதற்காக சாத்தியக்கூறு உள்ளதா என்பது குறித்து அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் ஆராய்ச்சி நடத்தி வருகின்றனர். இந்த ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக சுமார் 250 கோடி அமெரிக்க டாலர் செலவில் செவ்வாய் கிரக பயண திட்டம் மேற்கொள்ளப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட கியூரியாசிட்டி ரோவர் விண்கலம் கடந்த ஆகஸ்ட் மாதம் 6 ம் தேதி செவ்வாய் கிரகத்தில் கியூரியாசிட்டி ரோவர் என்ற இடத்தில் பத்திரமாக தரையிறங்கி ஆய்வு பணியை மேற்கொண்டு வருகிறது.

செவ்வாய் கிரகப் பாறையில் துளையிட்டு அதில் இருந்து மண்ணை சேகரித்து அதனை புகைப்படமாக நாசா ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பி உள்ளது. இதனை ஆய்வு செய்த விஞ்ஞானிகள், களிமண், சல்பேட் மற்றும் தாதுப் பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இவை உயிர்கள் வாழ அத்தியாவசியமானவை என அவர்கள் தெரிவித்தனர். கியூரியாசிட்டி விண்கலம் ஆய்வு நடத்தியது எல்லோ நயிப் பே எனும் பகுதியில் என்றும் அங்கு ஒரு காலத்தில் குடிப்பதற்கு ஏற்ற தண்ணீர் இருந்திருப்பதாகவும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டனர். 

இந்த ஆய்வின் மூலம் செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்திருக்க கூடும் என்பது உறுதியாகி உள்ளது என்றும் அங்கு மனிதர்கள் குடியேறி வாழ முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர். எனினும் கியூரியாசிட்டி விண்கலம் மேலும் ஒன்றரை ஆண்டு காலம் செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ளவிருப்பதால் அதில் கிடைக்கும் தகவல்களை பொறுத்தே செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் குடியேறி வாழ முடியுமா என்பது குறித்து திட்டவட்டமான முடிவுக்கு வர முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்