முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜோஷிமத் போல் காஷ்மீர் பகுதியிலும் வீடுகளில் விரிசல் : இந்திய புவியியல் குழு ஆய்வு

சனிக்கிழமை, 4 பெப்ரவரி 2023      இந்தியா
Kashmir 2023 02 04

Source: provided

ஜம்மு : ஜம்மு - காஷ்மீர் மாநிலம் தோடா பகுதியில் 22 வீடுகளில் ஏற்பட்டுள்ள விரிசல்கள் குறித்து இந்திய புவியியல் குழு ஆய்வு செய்யவிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உத்தராகண்ட் மாநிலம் ஜோஷிமத் பகுதியில் ஏற்பட்டது போலவே ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடா பகுதியில் வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த விரிசலால் இதுவரை 22 கட்டிடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 19 குடும்பங்கள் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளன. 

இதுகுறித்து தாத்ரி பகுதியின் துணை ஆட்சியர் ஆதார் ஆமின் சார்கர் கூறுகையில், 

தோடா மாவட்டத்தில் டிசம்பர் மாதத்தில் ஒரு வீட்டில் விரிசல் ஏற்பட்டது. நேற்று முன்தினம் வரை ஆறு கட்டிடங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. தற்போது விரிசல்களின் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. பல கட்டிடங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் அந்த பகுதி புதைந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார். 

மேலும் தோடா பகுதியின் நிலைமை துணை ஆணையர் மற்றும் மூத்த அதிகாரிகளால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது. பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதியில் ஆய்வு மேற்கொள்ள இந்திய புவியியல் வல்லுநர் குழு ஒன்றை அரசு அனுப்பியுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதியில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் தங்களது அறிக்கைகளை அரசுக்கு சமர்ப்பிப்பார்கள். பாதிக்கப்பபட்ட பகுதியில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து