முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

36 தொலைதொடர்பு செயற்கைகோள்களுடன் எல்.வி.எம்-3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது : இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 26 மார்ச் 2023      இந்தியா
Isro 2023 03 25

Source: provided

ஸ்ரீஹரிகோட்டா :36 தொலைத் தொடர்பு செயற்கைக் கோள்களுடன் எல்.வி.எம்-3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார். 

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அதிக எடையை தூக்கி செல்லும் ஜி.எஸ்.எல்.வி. ரகத்தில் எல்.வி.எம்3-எம்3 என்ற ராக்கெட்டை வடிவமைத்து உள்ளது. இந்த ராக்கெட் ஜி.எல்.எஸ்.வி எம்.கே-3 என்று அழைக்கப்பட்டது. 

இதில் ஒன்வெப் இந்தியா-2க்கான 36 செயற்கைக் கோள்கள் பொருத்தபட்டு உள்ளன. இது ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து நேற்று காலை 9 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. இந்த எல்.வி.எம்3 ராக்கெட் 43.5 மீட்டர் உயரமும், 643 டன் எடையும் கொண்டது.

இந்த நிலையில், எல்.வி.எம்-3 ராக்கெட் திட்டம் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார். புவி சுற்றுவட்டப்பாதையில் சரியாக பயணித்து நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் இந்த திட்டத்தை வெற்றிகரமாக முடித்த குழுவினருக்கு எனது பாராட்டுகள் என்றும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். 5.9 டன் எடை கொண்ட 36 செயற்கைக் கோள்கள் தாழ்வான புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து