முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவை ஆண்ட கடைசி மன்னரின் கை கடிகாரம் ரூ. 50 கோடிக்கு ஏலம்

புதன்கிழமை, 24 மே 2023      உலகம்
China 2023-05-24

Source: provided

ஹாங்காங் : சீனாவை ஆண்ட கீயும் அரச வம்சத்தில் வந்த கடைசி மன்னரின் கை கடிகாரம் ஒன்று ரூ.50 கோடிக்கு ஏலம் போகியுள்ளது. 

இந்த கடிகாரத்திற்கு சொந்தக்காரர் சீனாவின் கீயும் அரச வம்சத்தில் வந்த கடைசி மன்னரான அஸின்கியரோ புய் ஆவார். இவரது வாழ்க்கையை தழுவியே தி லாஸ்ட் எம்ப்ரர் என்ற ஆஸ்கர் திரைப்படம் எடுக்கப்பட்டது. 

இரண்டாம் உலக போரின் பொது ரஷ்யாவால் சிறைபிடிக்கப்பட்டு 5 ஆண்டுகள் சிறை வைக்கப்பட்ட இவர் தனது கை கடிகாரத்தை ரஷ்யா மொழி பெயர்ப்பாளர் ஒருவருக்கு அன்பளிப்பாக அளித்துள்ளார். 

ஏலத்திற்கு வந்த இந்த கடிகாரத்திற்கு குறைந்தபட்ச விலையாக ரூ. 24 கோடி நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.  தற்போது இந்த கடிகாரத்தை ஹாங்காங்கை சேர்ந்த பழம்பொருட்களை சேகரிக்கும் கோடீஸ்வரர் ஒருவர் ரூ. 50 கொடியே 54 லட்சம் ஏலத்தில் எடுத்துள்ளார். 

இந்த கடிகாரம் பிரபல ஆடம்பர தயாரிப்பு நிறுவனமான படெக் பிலிப்பிப் தயாரித்ததாகும். மன்னர் வம்சத்தை சேர்ந்த ஒருவரின் கை கடிகாரம் அதிக அளவில் ஏலம் போவது இதுவே முதல் முறையாகும். கடந்த 2017-ம் ஆண்டு வியட்நாமின் கடைசி மன்னரின் கடிகாரம் ரூ. 41 கோடிக்கு ஏலம் போனதே அதிக தொகையாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து