முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சிம்பிள் சிக்கன் கறி

Cooking time in minutes: 
20
Ingredients: 

சிம்பிள் சிக்கன் கறி செய்யத் தேவையான பொருள்கள்;

  1. சிக்கன் - 1/2 கிலோ.
  2. மஞ்சள்தூள் -  1/2 ஸ்பூன்.
  3. எண்ணெய் - தேவையான அளவு.
  4. உப்பு - தேவையான அளவு.
  5. தயிர் -  1/2 கப். 
  6. பட்டை - 2.
  7. அன்னாசி பூ - 1.
  8. கிராம்பு - 3.
  9. ஏலக்காய் - 4.
  10. பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 2.
  11. பொடியாக நறுக்கிய இஞ்சி  - 2 துண்டு.
  12. பூண்டு - 6.
  13. சீரகம் - ஒரு ஸ்பூன்.
  14. தக்காளி - 4.
  15. மிளகாய்த்தூள் -  2 ஸ்பூன்.
  16. மல்லித்தூள் - 2 ஸ்பூன்.
  17. கரம்மசாலா தூள் - ஒரு ஸ்பூன்.
  18. மாங்காய் பவுடர் -  ஒரு டீஸ்பூன்.
  19. கஸ்தூரி மேத்தி - ஒரு ஸ்பூன்.
Method: 

செய்முறை ;

  1. ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த 1/2 கிலோ சிக்கன்,1/2 ஸ்பூன் மஞ்சள்தூள், 1/2 கப் தயிர் மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக  கலந்து விட்டு சிக்கனை 15 நிமிடம் ஊற வைக்கவும்.
  2. அடுப்பில் கடாய் வைத்து சிறிதளவு எண்ணெய்யை ஊற்றவும்.
  3. எண்ணெய் சூடானவுடன் 2 பட்டை, ஒரு அன்னாசிப்பூ,3 கிராம்பு, 4 ஏலக்காய் மற்றும் பொடியாக நறுக்கிய 2 பெரிய வெங்காயத்தை  போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
  4. இதனுடன் பொடியாக நறுக்கிய 2 துண்டு இஞ்சி, 6 பல் பூண்டு,ஒரு ஸ்பூன் சீரகத்தை போட்டு நன்றாக வதக்கி எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  5. கடாயில்  வதக்கியவற்றை  மிக்சி ஜாரில்போட்டு நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
  6. மிக்சி ஜாரில்  4 தக்காளியை போட்டு நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
  7. அடுப்பில் கடாய் வைத்து சிறிதளவு எண்ணெய்யை ஊற்றவும்.
  8. எண்ணெய் சூடானவுடன்  மிக்சியில் அரைத்த மசாலா விழுதையும், தக்காளி விழுதையும் ஊற்றி நன்றாக வதக்கவும்.
  9. இதனுடன் 2 ஸ்பூன் மிளகாய்த்தூள், 2 ஸ்பூன் மல்லித்தூள் போட்டு கிளறிவிடவும்.
  10. இதனுடன் ஒரு ஸ்பூன் கரம்மசாலா தூள் மற்றும் ஊற வைத்த 1/2 கிலோ  சிக்கனை போட்டு கலந்து விட்டு  கடாயை 5  நிமிடம் மூடி போட்டு மூடி சிக்கனை வேக விடவும்.
  11. 5 நிமிடம் கழித்து  கடாய் மூடியை  திறந்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து விட்டு 15 நிமிடம் கடாயை மூடி போட்டு மூடி சிக்கனை வேக விடவும்.
  12. 15 நிமிடம் கழித்து கடாய் மூடியை  திறந்து கிளறி விட்டு ஒரு டீஸ்பூன் மாங்காய் பவுடர், ஒரு ஸ்பூன் கஸ்தூரி மேத்தி  போட்டு கலந்து விடவும்.
  13. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
  14. சுவையான சிம்பிள் சிக்கன் கறி ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago