முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய கூட்டணியில் தான் உள்ளோம்: டி.டி.வி. தினகரன் தகவல்

சனிக்கிழமை, 12 ஏப்ரல் 2025      தமிழகம்      அரசியல்
TTV 2023 01 20

சென்னை, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அ.ம.மு.க. தொடர்கிறது; ஓபிஎஸ் தனிமைப்படுத்தப்பட மாட்டார். ஒற்றைத் தலைமையின் கீழ் திரளாவிட்டாலும் தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை குறிக்கோளுடன் ஓரணியில் திரண்டுள்ளோம். என டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். 

அ​தி​முக பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில் 2026 தமிழக சட்​டப்​பேரவை தேர்​தலை சந்திக்க உள்​ளோம். பாஜக​வும், அ.தி.மு.க.வும் இணைந்து தமிழகத்​தில் கூட்​டணி ஆட்சி அமைக்கும்’’ என்று சென்னை​யில் மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா நேற்றுமுன்தினம் அறிவித்த நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தல் தொட்டே இடம்பெற்றுள்ள அமமுகவின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நேற்று (சனிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். ஆஞ்சியியோகிராம் பரிசோதனை முடிவுகள் எனது இதயம் பலமாக இருப்பதை உறுதி செய்துள்ளது. நலமுடன் உள்ளேன். இன்னும் 30 ஆண்டுகளாவது அரசியலில் ஈடுபடும் ஆரோக்கியம் இருக்கிறது. நேற்றைய அமித் ஷா செய்தியாளர் சந்திப்பு பற்றிய கேள்விகளோடு வந்துள்ளீர்கள். அம்மாவின் தொண்டர்கள் ஓரணியில் திரண்டு திமுக எனும் தீய சக்தியை வீழ்த்த தேஜ கூட்டணிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றே நான் கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தல் தொட்டு வலியுறுத்தி வருகிறேன். அது தான் இப்போது நடக்கிறது.

தேஜ கூட்டணி கடல் அலை போன்றது, நாங்கள் மோடி அணியில் இருக்கிறோம். தேஜ கூட்டணியில் உள்ள அனைவரும் ஓரணியில் திரண்டு ஒரே குறிக்கோளோடு செயல்படுகிறோம். இந்தத் தருணத்தில் தேஜ கூட்டணியில் தான் அமமுக தொடர்கிறது. அதிமுக கூட்டணிக்கு வந்ததால் அமமுக என்னவாகும்?, ஓபிஎஸ் கைவிடப்பட்டாரா? என்பதெல்லாம் வெறும் ஊகங்கள். நாங்கள் எல்லோரும் மோடியின் கரங்களை வலுப்படுத்த அந்தக் கூட்டணிக்குச் சென்றோம். 

அந்த நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்க மாட்டோம். ஒருங்கிணைந்த அதிமுகவுக்கு வாய்ப்பில்லை, அது ஏற்பட சிலருக்கு பரந்த மனநிலை இல்லை. ஆகையால் ஓரணியில் திரள வேண்டும் என்றே சொல்லிவந்தோம். ஒரு தலைமையின் கீழ் திரளாவிட்டாலும் ஓரணியில் ஒற்றைக் குறிக்கோளுடன் திரண்டுள்ளோம். 2021-ம் ஆண்டு சரியான கூட்டணி அமைந்திருந்தால் திமுக ஆட்சிக்கே வந்திருக்காது. இந்த முறை அமித் ஷா, மோடி அதை சரியாகக் கையாள்வார்கள். இவ்வாறு டிடிவி தினகரன் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 week ago
View all comments

வாசகர் கருத்து