முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பவுன் ரூ.70,000-ஐ நெருங்கியது: தங்கம் விலை மீண்டும் வரலாறு காணாத உச்சம்

வெள்ளிக்கிழமை, 11 ஏப்ரல் 2025      தமிழகம்
gold 2025-01-03

Source: provided

சென்னை : தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.185 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,745-க்கும், பவுனுக்கு ரூ.1480 உயர்ந்து ஒரு பவுன் ரூ.69,960-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.108-க்கு விற்பனையானது. தங்கம் விலை கடந்த 3 நாட்களில் மட்டும் பவுனுக்கு ரூ.4,160 வரை உயர்ந்துள்ளது.

தங்கம் விலை கடந்த 3 நாட்களில் மட்டும் பவுனுக்கு ரூ.4,160 வரை உயர்ந்துள்ளது. இந்த புதிய உச்சங்கள் நடுத்தர வர்க்க மக்களை இனி தங்கம் வாங்குவது கனவு தான் என்ற நிலைக்குத் தள்ளியுள்ளது.  அமெரிக்க கெடுபிடியும்; சீனப் பிடிவாததும்! சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த மார்ச் 16-ம் தேதி 22 காரட் ஒரு பவுன் தங்கம் ரூ.63,120-க்கு விற்பனையானது. பின்னர், தொடர்ந்து அதிகரித்து, கடந்த 3-ம் தேதி ரூ.68,480 என புதிய உச்சம் தொட்டது. இதன்பிறகு, தங்கம் விலை குறையத் தொடங்கியது. கடந்த வாரத்தில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,680 குறைந்தது. இதனால், சுபகாரியங்களுக்கு நகை வாங்குவோர் சற்று நிம்மதி அடைந்தனர்.

ஆனால் 5 நாட்கள் சரிவுக்குப் பின்னர் இந்த வாரம் மீண்டும் தங்கம் விலை உயரத் தொடங்கியது. நேற்று முன்தினம் (ஏப்.10) ஒரு பவுன் மீண்டும் ரூ.68,000-ஐ கடந்தது. அதாவது கடந்த மார்ச் 3-ம் தேதி விற்பனையானது போல் நேற்று முன்தினம் தங்கம் விலை பவுன் ரூ.68,480-க்கு விற்பனையானது. இதற்கு ட்ரம்ப் வரி விதிப்புகளால் நிலவும் சர்வதேச பொருளாதார நிச்சயமற்றத் தன்மை மிக முக்கியக் காரணமாக உள்ளது. பரஸ்பர வரி பட்டியலை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த 2-ம் தேதி வெளியிட்டார். இதில் சீன பொருட்களுக்கான வரி 34 சதவீத ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதற்கு பதிலடியாக அமெரிக்காவின் அனைத்து பொருட்களுக்கும் 34 சதவீத வரி விதிக்கப்படும் என சீனா அறிவித்தது. வரிக்கு வரி என்று இந்த வணிகப் போர் அமெரிக்கா - சீனா இடையே வலுத்துவருகிறது.

இந்தச் சூழலில் உலக நாடுகளின் பொருட்கள் மீதான பரஸ்பர வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்தார் ட்ரம்ப். எனினும் இது சீனாவுக்குப் பொருந்தாது என்று தெரிவித்தார். மேலும் சீனாவுக்கான பரஸ்பர வரியை மட்டும் ட்ரம்ப் 125 சதவீதமாக அதிகரித்தார். ஆனாலும் நேற்று ஷாங்காய் சந்தைகள் ஏற்றத்துடனேயே இருந்தன. இந்த நிலையில் தற்போது சீன பொருட்கள் மீதான வரி 145 சதவீதமாக அதிகரிப்பதாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

சீனாவுக்கு 145 சதவீதம்; பேஸ்லைன் வரி 10 சதவீதம் - சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 145 சதவீத வரியும், அமெரிக்கா-மெக்சிகோ-கனடா ஒப்பந்தத்தின் கீழ் வராத அலுமினியம், ஆட்டோமொபைல்கள் மற்றும் கனடா மற்றும் மெக்சிகோவிலிருந்து வரும் பொருட்களுக்கு 25 சதவீத வரியும், மற்ற அனைத்து இறக்குமதி பொருட்களுக்கும் 10 சதவீத வரியும் விதிக்கப்படுவதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. அமெரிக்காவின் கெடுபிடிகளை சமாளிக்க அமெரிக்க கடன் பத்திரங்களை வாங்கி வைத்திருந்த சீனா அவற்றையெல்லாம் விற்றுவிட்டு தங்கத்தின் மீதான முதலீட்டை அதிகரித்து வருகிறது. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து விலையும் தாறுமாறாக உயர்ந்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 week ago
View all comments

வாசகர் கருத்து