முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவையில் த.வெ.க.வின் முதல் பூத் கமிட்டி மாநாடு?

சனிக்கிழமை, 12 ஏப்ரல் 2025      தமிழகம்
Vijay 2025-03-28

Source: provided

சென்னை : தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பூத் கமிட்டி மாநாடு குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவார் என தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தமிழக வெற்றிக்கழகம் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தேர்தலை எதிர்கொள்ளும் பொருட்டு பூத் கமிட்டி அமைப்பதில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதனை தொடர்ந்து, தமிழக வெற்றிக்கழகத்தின் பூத் கமிட்டி மாநாடு 5 மண்டலங்களில் நடத்த நேற்று முன்தினம் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பூத் கமிட்டி மாநாடு குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவார் என தகவல் வெளியாகி உள்ளது. முதற்கட்டமாக மேற்கு மண்டலமான கோவையில் முதல் பூத் கமிட்டி மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பூத் கமிட்டி மாநாட்டில் தலைவர் விஜய் பங்கேற்பார் என்றும் கூறப்படுகிறது. அடுத்தக்கட்டமாக மேற்கு, மத்திய, தெற்கு, வடக்கு, டெல்டா என 5 மண்டலங்களாக பிரித்து பூத் கமிட்டி மாநாட்டை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பூத் கமிட்டி மாநாடு முடிந்தபின் தங்கள் கட்சியின் முழு பலம் அனைவருக்கும் தெரியவரும் என த.வெ.க. தலைவர் விஜய் ஏற்கனவே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 week ago
View all comments

வாசகர் கருத்து