முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் பங்குனி தேரோட்டம் கோலாகலம்

சனிக்கிழமை, 12 ஏப்ரல் 2025      ஆன்மிகம்
Samayapuram 2024-04-16

Source: provided

திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோவில் பங்குனி தேரோட்டம் நடைபெற்றது. கோவிந்தா... ரங்கா... ரங்கா... என கோஷங்களுடன் பக்தர்கள் தேரலை வடம் பிடித்து இழுத்தனர்.

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவது திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில். இங்கு ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் என்ற போதும், ஆதிப் பிரம்மோற்சவம் எனப்படும் பங்குனித் தேர்த் திருவிழா பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டிற்கான பங்குனித் தேர் திருவிழா கடந்த 3 ஆம் தேதி அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. மேலும் இந்த திருவிழா 11 நாட்கள் நடைபெறும் பங்குனி உற்சவ திருவிழாவில், தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, ஆண்டுக்கொரு முறை மட்டுமே நடைபெறும் நம்பெருமாள்- உறையூர் கமலவல்லி நாச்சியார் சேர்த்தி சேவை ஏப்.8-ம் தேதியும், நம்பெருமாள்- ஸ்ரீரங்க நாச்சியார் சேர்த்தி சேவை நேற்று முன்தினம் 11-ம் தேதியும் நடைபெற்றது. விழாவின் முக்கிய கோரதம் எனப்படும் பங்குனித் தேரோட்டம் நேற்று 12-ம் தேதி வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக பெருமாள் சாமிக்கு சிறப்பு பூஜைகளும் அலங்காரங்களும் செய்யப்பட்டு வீதி உலாவாக வந்து தேரில் அமர்ந்தார்.

இதனை தொடர்ந்து நேற்று காலை 9 மணி அளவில் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். விழாவில் பங்கு கொண்ட பக்தர்கள் அனைவரும் கோவிந்தா... கோவிந்தா... ரங்கா... ரங்கா... என கோஷங்களுடன் ஆரவாரமாக தேரை வடம் பிடித்து வீதி உலாவாக இழுத்துச் சென்றனர். மேலும் இந்த திருவிழாவில் எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களும் ஏற்படாமல் இருப்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 week ago
View all comments

வாசகர் கருத்து