முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரேயாஸ் ஐயரின் நம்பிக்கை என்னை வியப்படைய வைக்கிறது : இளம் வீரர் நேஹல் வதேரா நெகிழ்ச்சி

வெள்ளிக்கிழமை, 11 ஏப்ரல் 2025      விளையாட்டு
Punjab-team 2025-03-26

Source: provided

சண்டிகர் : ஸ்ரேயாஸ் ஐயரின் நம்பிக்கை தன்னை வியப்படைய வைக்கிறது என பஞ்சாப் கிங்ஸின் இளம் வீரர் நேஹல் வதேரா மனம் திறந்துள்ளார்.

பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக...

நடப்பு ஐ.பி.எல். தொடரில் நேஹல் வதேரா பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ஐ.பி.எல். மெகா ஏலத்துக்கு முன்பாக மும்பை இந்தியன்ஸ் அணி அவரை விடுவித்ததை யடுத்து, பஞ்சாப் கிங்ஸ் அவரை ரூ.4.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இந்த சீசனில் 3 போட்டிகளில் விளையாடியுள்ள நேஹல் வதேரா 114 ரன்கள் குவித்துள்ளார்.

எளிதில் பேசி பழகுகிறார்...

பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் நேஹல் வதேரா, அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் குறித்து மனம் திறந்துள்ளார். ஸ்ரேயாஸ் ஐயர் குறித்து  அவர் பேசியதாவது: ஸ்ரேயாஸ் ஐயர் அணியில் உள்ள அனைத்து வீரர்களிடமும் உடனடியாக எளிதில் பேசி பழகுகிறார். அந்த விஷயம் அவரிடம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அவரிடம் உள்ள நம்பிக்கை என்னை வியப்படைய வைக்கிறது. அணியில் கேப்டன் இந்த அளவுக்கு நம்பிக்கையுடன் இருக்கும்போது, மற்ற வீரர்களும் நேர்மறையாக உணர்வார்கள்.

சிறப்பான உணர்வு...

கடந்த காலத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிக்கி பாண்டிங் கூட்டணி டில்லி அணிக்காக சிறப்பாக இருந்துள்ளது. அந்த கூட்டணி தற்போது சிறப்பாக தொடர்கிறது. ரிக்கி பாண்டிங்குடன் இணைந்து செயல்படுவது சிறப்பான உணர்வை கொடுக்கிறது. அவருடன் இணைந்து செயல்படுவது எனக்கு கிடைத்த வரம் போன்று உணர்கிறேன் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 week ago
View all comments

வாசகர் கருத்து