முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கன் மாகாண துணை ஆளுநரின் இறுதி சடங்கு நிகழ்வில் நடந்த குண்டு வெடிப்பு: 11 பேர் பலி

வெள்ளிக்கிழமை, 9 ஜூன் 2023      உலகம்
Afghan 2023 06 09

Source: provided

காபூல் : ஆப்கன் மாகாண துணை ஆளுநரின் இறுதி சடங்கு நிகழ்ச்சியின் போது  நடந்த திடீர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்தனர். 

வடக்கு ஆப்கானிஸ்தான் பைசாபாத்தில் உள்ள நபாவி மசூதி அருகே தலிபான் மாகாண துணை ஆளுநரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்துக் கொண்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் காவல்துறை அதிகாரிகள் உள்பட முக்கிய தலைவர்கள் பலர் பங்கேற்றனர். 

இந்நிலையில், அங்கு திடீரென குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஆப்கானிஸ்தான் மாகாண ஆளுநர் அகமது அஹ்மதி தற்கொலை படை தாக்குதலால் படுகொலை செய்யப்பட்டார். இவரது கொலைக்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதில் அகமது உள்பட அவரது கார் ஓட்டுனரும் கொல்லப்பட்டார். மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர். 

இவரது இறுதிச்சடங்கு நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்ற நிலையில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்கிற அச்சம் இருப்பதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து