முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

தக்காளி உருளைக்கிழங்கு

Cooking time in minutes: 
20
Ingredients: 

தக்காளி உருளைக்கிழங்கு செய்யத் தேவையான பொருள்கள்;

  1. உருளைக்கிழங்கு - 1/2 கிலோ. 
  2. சீரகம் - 1/2 ஸ்பூன். 
  3. மல்லி - ஒரு ஸ்பூன்.
  4. பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 3. 
  5. பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு துண்டு. 
  6. மிளகாய் வத்தல் - 3.
  7. மிளகாய்த்தூள் - ஒரு ஸ்பூன்.
  8. மல்லித்தூள் - ஒரு ஸ்பூன்.
  9. மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன்.
  10. பெருங்காயத்தூள் - 1/4 ஸ்பூன். 
  11. பொடியாக நறுக்கிய தக்காளி - 4.
  12. கஸ்தூரி மேத்தி - 1/2 டீஸ்பூன். 
  13. மல்லி இலை - சிறிதளவு.
  14. உப்பு -  தேவையான அளவு .
Method: 

செய்முறை ;

  1. அடுப்பில் குக்கரை வைத்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி 1/2 கிலோ உருளை கிழங்கை போட்டு 2 விசில் வரும் வரை நன்றாக வேக வைத்துக்கொள்ளவும்.
  2. பின்னர் வேக வைத்த உருளை கிழங்கை ஒரு பாத்திரத்தில் வடிகட்டி  உருளை கிழங்கின் தோலை உரித்து நறுக்கி தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
  3. அடுப்பில் கடாய் வைத்து சிறிதளவு எண்ணெய்யை ஊற்றவும்.
  4. எண்ணெய் சூடானவுடன் 1/2 ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் மல்லி, பொடியா நறுக்கிய 3 பச்சை மிளகாயை போட்டு வதக்கவும்.
  5. இதனுடன் பொடியா நறுக்கிய ஒரு துண்டு இஞ்சி,3 மிளகாய் வத்தல்  ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள், ஒரு ஸ்பூன் மல்லித்தூள், 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள் 1/4 ஸ்பூன் பெருங்காயத்தூள் பொடியா நறுக்கிய 4 தக்காளி மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து விடவும்.
  6. வேக வைத்து நறுக்கி தயார் செய்து வைத்துள்ள உருளைக்கிழங்கை போட்டு வதக்கவும்.
  7. கடாயை மூடி போட்டு மூடி 5 நிமிடம் வேக வைக்கவும்.
  8. 5 நிமிடம் கழித்து மூடியை திறந்து 1/2 டீஸ்பூன் கஸ்தூரி மேத்தியை  போட்டு கிளறிவிடவும்.
  9. சிறிதளவு மல்லி இலையை போட்டு கிளறிவிடவும்.
  10. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
  11. சுவையான தக்காளி உருளைக்கிழங்கு ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 20 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 20 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 22 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 22 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 20 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 20 hours ago