முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

பன்னீர் மசாலா

Cooking time in minutes: 
20
Ingredients: 

பன்னீர் மசாலா செய்யத் தேவையான பொருள்கள்;

  1. பன்னீர் - 1/4 கிலோ.
  2. நல்லெண்ணை - 2 ஸ்பூன்.
  3. பட்டை - 1.
  4. சீரகம் - ஒரு ஸ்பூன்.
  5. மிளகாய் வத்தல் - 3.
  6. பிரியாணி இலை - 2.
  7. முந்திரி பருப்பு - 10.
  8. பொடியாக நறுக்கிய தக்காளி - 5.
  9. ஏலக்காய் - 2.
  10. சர்க்கரை - ஒரு ஸ்பூன். 
  11. நெய் - 2 ஸ்பூன். 
  12. கரம் மசாலா தூள் - ஒரு ஸ்பூன்.
  13. பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன். 
  14. மல்லித்தூள் - 2 டீஸ்பூன்.
  15. மிளகாய்த்தூள் - 2  டீஸ்பூன் 
  16. கஸ்தூரி மேத்தி - ஒரு ஸ்பூன் 
  17. மல்லி இலை - சிறிதளவு.
  18. பிரஷ் கிரீம் - ஒரு கப். 
  19. உப்பு - தேவையான அளவு.
Method: 

செய்முறை ;

  1. அடுப்பில் கடாய் வைத்து ஒரு ஸ்பூன் நல்லெண்ணையை ஊற்றவும்.
  2. எண்ணெய் சூடானவுடன்,ஒரு பட்டை, ஒரு ஸ்பூன் சீரகம், 3 மிளகாய் வத்தல், 10 முந்திரி பருப்பு, 2 பிரியாணி இலையை போட்டு வதக்கவும்.
  3. இதனுடன் பொடியாக  நறுக்கிய 5 தக்காளி,2 ஏலக்காய், ஒரு ஸ்பூன் சர்க்கரை போட்டு நன்றாக வதக்கி,சிறிதளவு தண்ணீர் ஊற்றி கடாயை மூடி 5 நிமிடம் வேக வைக்கவும்,5 நிமிடம் கழித்து மூடியை திறந்து கிளறிவிட்டு அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும்.
  4. சிறிது நேரம் ஆறிய பின்னர் மிக்சி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
  5. அடுப்பில் கடாய் வைத்து 2 ஸ்பூன் நெய்  ஊற்றவும்.
  6. நெய் சூடானவுடன்,ஒரு ஸ்பூன் கரம் மசாலா, 1/4 டீஸ்பூன் பெருங்காயத்தூள் போட்டு வதக்கவும்.
  7. இதனுடன் மிக்சியில் அரைத்தவற்றை போட்டு கிளறி விடவும்.
  8. இதனுடன் 2 டீஸ்பூன் மல்லித்தூள், 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்,ஒரு ஸ்பூன் கஸ்தூரி மேத்தி,கொஞ்சம் மல்லி இலை,தேவையான அளவு உப்பு போட்டு கிளறி விடவும்.
  9. இதனுடன் 1/4 கிலோ பன்னீரை போட்டு ஒரு கப் பிரஷ் கிரீமையும்  போட்டு  கிளறி விடவும்.
  10. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
  11. சுவையான பன்னீர் மசாலா ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago