முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில்லி உருளைக்கிழங்கு

Cooking time in minutes: 
20
Ingredients: 

 

சில்லி உருளைக்கிழங்கு செய்யத்தேவையான பொருட்கள்.

  1. பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கு -1/4 கிலோ.
  2. மிளகாய் வத்தல் - 10.
  3. பொடியாக நறுக்கிய பூண்டு - 10 பல்.
  4. பொடியாக நறுக்கிய தக்காளி - 1.
  5. மைதா மாவு  - 1/2 கப்.
  6. அரிசி மாவு -1 ஸ்பூன்.
  7. கான் பிளவர் மாவு -1 ஸ்பூன்.
  8. மிளகு தூள் - 1/2 ஸ்பூன்.
  9. எண்ணெய் - 1/2 லிட்டர்.
  10. இஞ்சி,பூண்டு விழுது -1 ஸ்பூன்.
  11. கரம் மசாலா -1 ஸ்பூன்.
  12. ரெட் சில்லி சாஸ் - 2 ஸ்பூன்.
  13. சர்க்கரை - 1 ஸ்பூன்.
  14. பொடியாக நறுக்கிய குடைமிளகாய் - 6.
  15. பொடியாக நறுக்கிய வெங்காயம் -1.
  16. பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் - 2 ஸ்பூன்.
  17. உப்பு -தேவையான - அளவு.

 

Method: 

 

செய்முறை ;-- 

  1. அடுப்பில் கடாயை  வைத்து சிறிதளவு தண்ணீர்  ஊற்றி பொடியாக நறுக்கிய 1/4 கிலோ உருளைக்கிழங்கு மற்றும் சிறிதளவு உப்பை  போட்டு கலந்து விட்டு மூடி போட்டு மூடி 10 நிமிடங்கள் நன்றாக வேக வைத்துக்கொள்ளவும்.
  2. 10 நிமிடங்கள் கழித்து வேக வைத்த உருளைக்கிழங்கை வடி கட்டி ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  3. அடுப்பில் கடாயை  வைத்து சிறிதளவு தண்ணீர்  ஊற்றி 10 மிளகாய் வத்தல்,பொடியாக நறுக்கிய 10 பல். பூண்டு,பொடியாக நறுக்கிய ஒரு  தக்காளியை போட்டு மூடி போட்டு மூடி 5 நிமிடங்கள் நன்றாக வேக வைத்துக்கொள்ளவும்.
  4. 5 நிமிடங்கள் கழித்து அடுப்பில் இருந்து இறக்கி சிறிது நேரம் ஆற விட்டு ஒரு மிக்சி ஜாரில் போட்டு அரைத்து வைத்துக்கொள்ளவும்.
  5. ஒரு பாத்திரத்தில் மைதா மாவு 1/2 கப்,அரிசி மாவு ஒரு ஸ்பூன்,கான் பிளவர் மாவு ஒரு ஸ்பூன்,மிளகு தூள் 1/2 ஸ்பூன் மற்றும் தேவையான  அளவு உப்பு போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து விடவும்.
  6. இதனுடன் வேக வைத்த உருளைக்கிழங்கை போட்டு நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும்.
  7. அடுப்பில் கடாய் வைத்து 1/2 லிட்டர்  எண்ணெய் ஊற்றவும்.
  8. எண்ணெய்  சூடானவுடன் தயார் செய்து வைத்துள்ள உருளைக்கிழங்கு கலவையை போட்டு  பொரிக்கவும்.
  9. திருப்பி திருப்பி போட்டு நன்றாக பொறித்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  10. அடுப்பில் கடாய் வைத்து சிறிதளவு  எண்ணெய் ஊற்றவும்.
  11. எண்ணெய்  சூடானவுடன் ஒரு ஸ்பூன் இஞ்சி,பூண்டு விழுது போட்டு வதக்கவும்.
  12. இதனுடன் மிக்சி ஜாரில் அரைத்து வைத்துள்ள விழுதை ஊற்றி வதக்கவும்.
  13. இதனுடன் கரம் மசாலா ஒரு ஸ்பூன்,ரெட் சில்லி சாஸ் 2 ஸ்பூன்,சர்க்கரை ஒரு ஸ்பூன் மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு கலந்து விடவும்.

  14. இதனுடன் பொடியாக நறுக்கிய குடைமிளகாய் 6,பொடியாக நறுக்கிய ஒரு வெங்காயம்,பொடியாக நறுக்கிய 2 ஸ்பூன் வெங்காயத்தாள் மற்றும் பொறித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை போட்டு நன்றாக கலந்து விடவும்.
  15. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
  16. சுவையான சில்லி உருளைக்கிழங்கு ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago