முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

ஸ்வீட் & ஸ்பைஸி சிக்கன்

Cooking time in minutes: 
20
Ingredients: 

 

ஸ்வீட் & ஸ்பைஸி சிக்கன் செய்யத்தேவையான பொருட்கள்.

  1. போன்லெஸ் சிக்கன் - 600 கிராம்.
  2. மிளகாய்  தூள் – 3 ஸ்பூன்.
  3. இஞ்சி பொடி - சிறிதளவு.
  4. இஞ்சி,பூண்டு விழுது - 2 ஸ்பூன்.
  5. வினிகர் – ஒரு ஸ்பூன்.
  6. எலுமிச்சம்பழ சாறு - 1/2 ஸ்பூன்.
  7. சர்க்கரை –  ஒரு ஸ்பூன்.
  8. சோயா சாஸ் - 2 ஸ்பூன்.
  9. சில்லி சாஸ் - 2 ஸ்பூன்.
  10. கெட்சப் –  ஒரு ஸ்பூன்.
  11. வெஜிடபிள் ஆயில் – 1 ஸ்பூன்.
  12. மைதா மாவு - 3 ஸ்பூன்.
  13. அரிசி மாவு - 3 ஸ்பூன்.
  14. கார்ன் பிளார் மாவு - 3 ஸ்பூன்.
  15. பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - சிறிதளவு.
  16. பொடியாக நறுக்கிய வேர்க்கடலை - சிறிதளவு.
  17. எண்ணெய் - சிறிதளவு.
  18. உப்பு - தேவையான - அளவு.

 

Method: 

செய்முறை ;--

  1. ஒரு பவுலில் 600 கிராம் போன்லெஸ் சிக்கனை எடுத்துக்கொள்ளவும்.
  2. இதனுடன் தேவையான அளவு உப்பு,மிளகாய்  தூள் 3 ஸ்பூன்,இஞ்சி பொடி சிறிதளவு,இஞ்சி,பூண்டு விழுது 2 ஸ்பூன்,வினிகர் 1 ஸ்பூன் ஊற்றி நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும்.
  3. ஒரு பவுலில் ஒரு ஸ்பூன் சர்க்கரை,மிளகாய்  தூள் 2 ஸ்பூன்,சோயா சாஸ் 2 ஸ்பூன்,சில்லி சாஸ் 2 ஸ்பூன்,கெட்சப் ஒரு ஸ்பூன்,வெஜிடபிள் ஆயில் ஒரு ஸ்பூன் ஊற்றி நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும்.
  4. ஒரு பவுலில் 3 ஸ்பூன் மைதா மாவு,அரிசி மாவு 3 ஸ்பூன்,கார்ன் பிளார் மாவு 3 ஸ்பூன் மற்றும்  தேவையான அளவு உப்பு போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து விட்டு இதனுடன் சிக்கனை போட்டு நன்றாக கலந்து விட்டு 10 நிமிடங்கள் சிக்கனை ஊற வைக்கவும்.
  5. அடுப்பில் கடாய்யை வைத்து சிறிதளவு எண்ணெய்யை ஊற்றவும்.
  6. எண்ணெய்  சூடானவுடன் மசாலா கலந்து தயார் செய்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை  எண்ணெயில் போட்டு  பொரிக்கவும்.
  7. திருப்பி போட்டு பொறித்து எடுத்து சிறிது நேரம் ஆற வைத்து மீண்டும் எண்ணெயில் போட்டு  நன்றாக பொரிக்கவும், திருப்பி போட்டு நன்றாக பொறித்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  8. அடுப்பில் கடாய்யை வைத்து மசாலா கலவையை ஊற்றவும்,மசாலா கலவை சூடானவுடன் கலந்து விட்டு பொறித்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை போட்டு இதனுடன் பொடியாக நறுக்கிய சிறிதளவு பச்சை மிளகாயை போட்டு நன்றாக கிண்டி விடவும்.
  9. இதனுடன் மீண்டும் பொடியாக நறுக்கிய சிறிதளவு பச்சை மிளகாய் மற்றும் பொடியாக நறுக்கிய சிறிதளவு வேர்க்கடலையை போட்டு நன்றாக கிண்டி விடவும்.
  10. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
  11. சுவையான ஸ்வீட் & ஸ்பைஸி சிக்கன் ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 4 days ago