முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கணக்குப் புதிரை விடுவிக்க ஒரு மில்லியன் டாலர் பரிசு..!

வியாழக்கிழமை, 6 ஜூன் 2013      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், ஜூன். 7 - கணக்குப் புதிரை விடுவிக்கும் புத்திசாலிக்கு ஒரு மில்லியன் டாலர் பரிசளிக்கப் போவதாக அறிவித்துள்ளார் அமெரிக்க கோடீஸ்வரர் ஒருவர்.அமெரிக்க, டல்லாஸ் நகரில் வசித்து வரும் ஆண்ட்ரூ பீல் என்ற கோடீஸ்வரர் ஒருவருக்கு எண்கணிதத்தில் ஆர்வம் அதிகமாம். இவர் ஒரு வங்கியாளர் ஆவார். 1990 ஆம் ஆண்டில், டிபெர்மெட் என்பவர் உருவாக்கிய தேற்றத்தால் கவரப்பட்ட ஆண்ட்ரூ, 1993 ம் ஆண்டில் பீலின் யூகம் என்ற பெயரில் ஒரு எண் புதிரை உருவாக்கினார். அடிப்படையில் ஒன்று போல் தோன்றும் இரண்டு புதிர்களுக்கு, விடையளிக்க திணறிய ஆண்ட்ரூ, புதிரை ஊர்ஜிதப்படுத்தினாலோ அல்லது இதற்கு சரிசமமான கணக்கீடுகளினால் நேர் செய்தாலோ அவர்களுக்கு பரிசளிக்கப்படும் என்று அறிவித்தார்.

எவ்வளவோ முயற்சி செய்தும் யாராலும் அந்த புதிருக்கு இதுவரை விடையளிக்க முடியவில்லையாம். பரிசுத்தொகை படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, தற்போது 10 லட்சமமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. ரோட் தீவில் உள்ள அமெரிக்க கணித சமூகம் என்ற அமைப்பு இத்தகவலை உறுதி படுத்தியுள்ளது. இது குறித்து ஆண்ட்ரூ கூறுகையில், இளம்வயதினர் கணக்கிலும், அறிவியலிலும் ்ஈடுபாடு கொள்வதை நான் ஊக்குவிக்க விரும்புகின்றேன். பரிசுத் தொகையை அதிகரிப்பது, அவர்களை குறிப்பாக பீலின் யூகத்தின் மேல் நாட்டம் கொள்ளச்செய்யும். கணக்கு என்ற அருமையான உலகத்தின் மீது நிறையப் பேருக்கு நாட்டம் ஏற்பட வேண்டும் என தெரிவித்தார்.

புதிருக்கு பதில் தெரிந்தோர், தங்கள் முடிவினை நடுநிலையான கணக்கு பதிப்பகத்தில் வெளியிடவேண்டும். மேலும், இதற்கென அமைக்கப்பட்டுள்ள பரிசுக் குழுவினரின் ஒப்புதலையும் பெற்றிருக்க வேண்டும் என்பது முக்கிய நிபந்தனை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்