முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கத்தார் நிறுவனத்திற்கு 5% ஏர்டெல் பங்குகள் விற்பனை

புதன்கிழமை, 19 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

 

சென்னை, ஜூன். 20 - இந்தியாவில் தொலைத் தொடர்பு சேவையை வழங்கி வரும் தனியார் நிறுவனமான பாரதி ஏர்டெல், தன்னுடைய 5 சதவீத பங்குகளை கத்தார் பவுண்டேசன் என்டோவ்மென்ட் என்ற நிறுவனத்திற்கு ரூ. 6,796 கோடிக்கு விற்பனை செய்திருப்பதாக தெரிவித்திருக்கிறது. 

சமீபத்தில் ஏர்டெல் 199,870,006 புதிய பங்குகளை வெளியிட்டிருக்கிறது. ஒரு பங்கின் விலை ரூ. 340 என்று நிர்ணயித்திருந்தது. இதை அறிந்த கத்தார் பவுண்டேசன் என்டோவ்மென்ட் நிறுவனம் ஏர்டெல்லின் 5 சதவீத பங்குகளை வாங்கி இருக்கிறது. வெளிநாட்டைச் சேர்ந்த கியுஎடிப்இ நிறுவனம், இந்திய நிறுவனமான ஏர்டெல்லின் பங்குகளை அதிக அளவில் வாங்கியிருப்பது, பங்குப் பரிவர்த்தனையின் ஒரு புதிய மைல்கல் ஆகும். இதன் மூலம் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் அதிகமாக முதலீடு செய்ய முன்வருவார்கள். மேலும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் அதிகமாக முதலீடு செய்ய இந்த பரிவர்த்தனை ஒரு புதிய நம்பிக்கையைக் கொடுக்கும். அதோடு கியுஎடிப்இ நிறுவனத்தோடு ஒரு இனிமையான உறவைத் தொடர நாங்கள் விரும்புகிறோம் என்று ஏர்டெல்லின் சேர்மன் சுனில் பாரதி மிட்டல் தெரிவித்திருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்