முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

கேரட்,உருளைக்கிழங்கு ப்ரை.

Cooking time in minutes: 
20
Ingredients: 

 

கேரட்,உருளைக்கிழங்கு ப்ரை செய்யத்தேவையான பொருட்கள்.

  1. உருளைக்கிழங்கு - 1/2 கிலோ.
  2. கேரட் - 1/4 கிலோ.
  3. முட்டை – 3.
  4. மிளகு தூள் – ஒரு ஸ்பூன்.
  5. மிளகாய் தூள் - ஒரு ஸ்பூன்.
  6. பொடியாக நறுக்கிய பூண்டு - 3 பல்.
  7. பொடியாக நறுக்கிய குடைமிளகாய் - 1/2.
  8. பொடியாக நறுக்கிய மல்லி இலை - சிறிதளவு.
  9. கார்ன் பிளவர் மாவு - 4 ஸ்பூன்.
  10. மைதாமாவு - 4 ஸ்பூன்.
  11. எண்ணெய் – 1/2 லிட்டர்.
  12. உப்பு - தேவையான அளவு.

 

Method: 

 

செய்முறை ;--

  1. 1/2 கிலோ உருளைக்கிழங்கை எடுத்து நீளமாக நறுக்கி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  2. 1/4 கிலோ கேரட்டை எடுத்து அதையும் நீளமாக நறுக்கி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  3. நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கு மற்றும்  கேரட்டை ஒரு பாத்திரத்தில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக  சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
  4. ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த உருளைக்கிழங்கு மற்றும் கேரட்டை எடுத்துக்கொள்ளவும்.
  5. இதனுடன் ஒரு ஸ்பூன் மிளகு தூள்,ஒரு ஸ்பூன் மிளகாய் தூள்,உப்பு தேவையான அளவு,பொடியாக நறுக்கிய 3 பல் பூண்டு,பொடியாக நறுக்கிய பாதி குடைமிளகாய்,பொடியாக நறுக்கிய மல்லி இலை சிறிதளவு,கார்ன் பிளவர் மாவு 4 ஸ்பூன்,மைதாமாவு 4 ஸ்பூன் போட்டு நன்றாக கலந்து விடவும்.
  6. இதனுடன் 3 முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கலந்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  7. அடுப்பில் கடாய் வைத்து 1/2 லிட்டர் எண்ணெய்யை ஊற்றவும்.
  8. எண்ணெய் சூடானவுடன் தயார் செய்து வைத்துள்ள உருளைக்கிழங்கு,கேரட் மற்றும் முட்டை கலவையை சிறிதளவு எடுத்து கடாயில் போட்டு பொரிக்கவும்.
  9. திருப்பி திருப்பி போட்டு நன்றாக பொரிக்கவும்.
  10. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
  11. சுவையான கேரட் உருளைக்கிழங்கு ப்ரை ரெடி.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 14 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 14 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 16 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 16 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 14 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 14 hours ago