முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோலி சிக்சர்: வீடியோ வைரல்

ஞாயிற்றுக்கிழமை, 24 நவம்பர் 2024      விளையாட்டு
Virat-Kohli 2023 07-22

Source: provided

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி 2-வது இன்னிங்சில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தற்போது வரை இந்தியா 6 விக்கெட்டுகளை இழந்து 467 ரன்கள் குவித்து 513 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன ஜெய்ஸ்வால் 161 ரன்களிலும், கேஎல் ராகுல் 77 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

மீண்டும் பார்முக்கு திரும்பியுள்ள விராட் கோலி 93 ரன்களுடனும், நிதிஷ் ரெட்டி 27 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். முன்னதாக இந்த ஆட்டத்தில் ஸ்டார்க் வீசிய பந்தில் விராட் கோலி அடித்த சிக்சர் பறந்து சென்று பவுண்டரி லைனில் உட்கார்ந்திருந்த பாதுகாவலரின் தலையில் பட்டது. இதனால் மைதானாத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியா ஆஸ்திரேலிய அணியின் மருத்துவர்கள் சென்று அவரை பரிசோதித்தனர். பின்னர் அவர் இயல்பு நிலைக்கு திரும்பினார்.

பாகிஸ்தான் அணி அறிவிப்பு

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இதில் முதலில் ஒருநாள் போட்டிகளும் அதனை தொடர்ந்து டி20 போட்டிகளும் நடைபெற உள்ளன. ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் அனைத்தும் புலவாயோவில் நடைபெறுகிறது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது. இரு அணிகளும் தொடரை வெற்றியுடன் தொடங்க தீவிர முனைப்பு காட்டும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

இந்நிலையில், இந்த ஆட்டத்திற்கான விளையாடும் வீரர்களை பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அறிவித்துள்ளது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக சைம் அயூப் மற்றும் அப்துல்லா ஷாபீக் ஆகியோர் களம் இறங்குகின்றனர். இதைத்தொடர்ந்து கம்ரான் குலாம், முகமது ரிஸ்வான், ஹசீபுல்லா கான், சல்மான் அலி ஆகா ஆகியோர் களம் இறங்குகின்றனர். தொடர்ந்து முகமது இர்பான் கான், ஆமீர் ஜமால், ஹாரிஸ் ரவுப், முகமது ஹஸ்னைன், பைசல் அக்ரம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். பாகிஸ்தான் அணி விவரம்; சைம் அயூப், அப்துல்லா ஷாபீக், கம்ரான் குலாம், முகமது ரிஸ்வான் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ஹசீபுல்லா கான், சல்மான் அலி ஆகா (துணை கேப்டன்), முகமது இர்பான் கான், ஆமீர் ஜமால், ஹாரிஸ் ரவுப், முகமது ஹஸ்னைன், பைசல் அக்ரம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 4 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 hours ago
View all comments

வாசகர் கருத்து