முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய மாணவர் படை தினம்: சென்னை போர் வீரர்கள் நினைவிடத்தில் மரியாதை

ஞாயிற்றுக்கிழமை, 24 நவம்பர் 2024      தமிழகம்
NCC 2024-11-24

Source: provided

சென்னை :  தேசிய மாணவர் படை தினத்தையொட்டி சென்னையில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்தில் நேற்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

உலகின் மிகப்பெரிய இளைஞர் அமைப்பாக விளங்கும் என்.சி.சி. எனப்படும் தேசிய மாணவர் படை  அமைப்பு 1948-ம் ஆண்டு நவம்பர் 24-ம் தேதி உருவாக்கப்பட்டது. அதன் 76-வது ஆண்டுவிழா நேற்று கொண்டாடப்பட்டது. 

 இதையொட்டி, சென்னை போர் வீரர்கள் நினைவிடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய ராணுவ தெற்கு பகுதி தளபதி லெப்டினண்ட் ஜெனரல் கரன்பீர்சிங் பிரார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பாண்டு வாத்தியம் முழங்க மலர் வளையம் வைத்து, மரியாதை செலுத்தினார். 

முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்த லெப் ஜெனரல் கே. எஸ். பிராரை, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான்  மற்றும் நிக்கோபார் உள்ளடக்கிய என்.சி. சி அமைப்பின் துணை தலைமை இயக்குநர் கமொடோர் எஸ்.ராகவ் வரவேற்றார். 

என்.சி.சி. கமாண்டர்கள் மற்றும் உயரதிகாரிகளுக்கு, கே. எஸ். பிரார், அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.  இந்த நிகழ்ச்சியின் ஒரு அம்சமாக சென்னையை மையமாக கொண்ட என்.சி.சி. 13-வது பட்டாலியன் இளம் வீரர்கள் குழுவினர், கம்பீரமாக அணிவகுப்பு நடத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து