முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சிக்கன் மிளகு வறுவல்

Cooking time in minutes: 
20
Ingredients: 

சிக்கன் மிளகு வறுவல் செய்யத் தேவையான பொருட்கள்.

  1. சிக்கன் – ஒரு கிலோ.
  2. மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்.
  3. மிளகாய் தூள் - ஒரு ஸ்பூன்.
  4. மிளகு தூள் - 2 ஸ்பூன்.
  5. சீரக தூள் - ஒரு ஸ்பூன்.
  6. சோம்பு தூள் - ஒரு ஸ்பூன்.
  7. பூண்டு - 5 பல்.
  8. மிளகாய் வத்தல் - 4.
  9. நீளமாக நறுக்கிய பச்சை மிளகாய் -3.
  10. பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 3.
  11. பொடியாக நறுக்கிய தக்காளி - 1/2.
  12. இஞ்சி,பூண்டு விழுது - ஒரு ஸ்பூன்.
  13. கறி மசாலா தூள் - 2 ஸ்பூன்.
  14. எண்ணெய் - 3 ஸ்பூன்.
  15. உப்பு -தேவையான அளவு.
Method: 
  1. செய்முறை ;--
  2. ஒரு பாத்திரத்தில் ஒரு கிலோ சிக்கனை எடுத்துக்கொள்ளவும்.
  3. இதனுடன் சிறிதளவு உப்பு மற்றும் 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்,மிளகாய் தூள்  ஒரு ஸ்பூன் போட்டு நன்றாக கலந்து விட்டு தனியாக  எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  4. அடுப்பில் கடாய் வைத்து 2 ஸ்பூன் மிளகு,சீரகம் ஒரு ஸ்பூன்,சோம்பு ஒரு ஸ்பூன் போட்டு நன்றாக வறுத்து சிறிது நேரம் ஆறவைத்து உரலில் போட்டு இடித்து பொடியாக்கி தனியாக  எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  5. அடுப்பில் கடாய் வைத்து 3 ஸ்பூன் எண்ணெய்யை ஊற்றவும்.
  6. எண்ணெய் சூடானவுடன் தயார் செய்து வைத்துள்ள மிளகு,சீரகம் மற்றும் சோம்பு பொடியை போட்டு வதக்கவும்.
  7. இதனுடன் பொடியாக நறுக்கிய 5 பல் பூண்டு,மிளகாய் வத்தல் 4,நீளமாக நறுக்கிய பச்சை மிளகாய் 3,பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் 3 மற்றும் பொடியாக நறுக்கிய பாதி தக்காளியை போட்டு வதக்கவும்.
  8. இதனுடன் தயார் செய்து வைத்துள்ள சிக்கனை போட்டு வதக்கவும்.
  9. இதனுடன் 2 ஸ்பூன் இஞ்சி,பூண்டு விழுது மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக கலந்து விட்டு கடாயை  மூடி போட்டு மூடி 5 நிமிடங்கள் சிக்கனை நன்றாக வேக வைத்துக்கொள்ளவும்.
  10. 5 நிமிடங்கள் கழித்து முடியை திறந்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து விட்டு தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக கலந்து விட்டு கடாயை  மூடி போட்டு மூடி10 நிமிடங்கள் சிக்கனை நன்றாக வேக வைத்துக்கொள்ளவும்.
  11. 10 நிமிடங்கள் கழித்து முடியை திறந்து மிளகு தூள் ஒரு ஸ்பூன் மற்றும் கறி மசாலா தூள் 2 ஸ்பூன் நன்றாக கலந்து விடவும்.
  12. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
  13. சுவையான சிக்கன் மிளகு வறுவல் ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago