முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

பாஸ்தா ஸ்நாக்ஸ்

Cooking time in minutes: 
20
Ingredients: 

பாஸ்தா ஸ்நாக்ஸ் செய்யத் தேவையான பொருட்கள்.

  1. பாஸ்தா - 400 கிராம்.
  2. மைதா மாவு - முக்கால் கிலோ.
  3. சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்,
  4. சில்லிபிளக்ஸ் - ஒரு டீஸ்பூன்,
  5. மிளகாய் தூள் - ஒரு டீஸ்பூன்.
  6. மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்.
  7. மேகி மசாலா தூள் - ஒரு ஸ்பூன்.
  8. பிரட் கிராம்ஸ் - 150 கிராம்.
  9. எண்ணெய் – 1/2 லிட்டர்.
  10. உப்பு - தேவையான அளவு.
  11. குத்தக்கூடிய குச்சிகள் – 12.
Method: 

செய்முறை ;--

  1. அடுப்பில் குக்கரை வைத்து ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி கொள்ளவும், தண்ணீர் சூடானவுடன் 400 கிராம் பாஸ்தாவை போடவும்,
  2. இதனுடன் சிறிதளவு  உப்பு மற்றும் ஒரு ஸ்பூன் எண்ணெய்யை ஊற்றி  கலந்து  விட்டு நன்றாக வேக வைக்கவும்.
  3. வேக வைத்த பாஸ்தாவை ஒரு  பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி  பாஸ்தாவை கழுவி சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும்.
  4. 10  பாஸ்தாவை எடுத்து ஒரு குத்தக்கூடிய குச்சியில் குத்தி தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
  5. இதே போல் மீதம் உள்ள பாஸ்தாவையும் குத்தக்கூடிய குச்சியில் குத்தி தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
  6. ஒரு பாத்திரத்தில் முக்கால் கிலோ மைதாமாவை எடுத்துக்கொள்ளவும்.
  7. இதனுடன்சிறிதளவு உப்பு,ஒரு டீஸ்பூன் சீரகத்தூள்,ஒரு டீஸ்பூன் சில்லிபிளக்ஸ்,ஒரு டீஸ்பூன் மிளகாய் தூள்,1/2 டீஸ்பூன்மிளகு தூள்,ஒரு ஸ்பூன்.மேகி மசாலா தூளை போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.
  8. இதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  9. ஒரு தட்டில் பிரட் கிராம்சை எடுத்துக் கொள்ளவும்.
  10. குச்சியில் குத்தி வைத்துள்ள பாஸ்தாவை எடுத்துமாவு கலவையில்  முக்கி எடுத்து  பின்னர் பிரட் கிரம்ஸில் போட்டு பாஸ்தாவின் எல்லா பக்கங்களிலும் பிரட் தூள்கள் ஒட்டும்படி பிரட்டி எடுத்து தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
  11. இதே போல் மீதம் உள்ள பாஸ்தாவையும்  தயார் செய்து  எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  12. அடுப்பில் கடாய் வைத்து 1/2 லிட்டர்  எண்ணெய்யை ஊற்றவும்,
  13. எண்ணெய்  சூடானவுடன் பிரட் கிரம்ஸில் பிரட்டி தயார் செய்து  எடுத்து வைத்துள்ள பாஸ்தாவை ஓவ்வொன்றாக எண்ணெய்யில் போட்டு நன்றாக பொரிக்கவும்.
  14. திருப்பி திருப்பி போட்டு நன்றாக வேக வைக்கவும்.
  15. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
  16. சுவையான பாஸ்தா ஸ்நாக்ஸ் ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 days ago