முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

உருளைக்கிழங்கு லாலிபாப்

Cooking time in minutes: 
20
Ingredients: 

உருளைக்கிழங்கு லாலிபாப் செய்யத் தேவையான பொருட்கள்.

  1. உருளைக்கிழங்கு - 5.
  2. பொடியாக நறுக்கிய மல்லி இலை – சிறிதளவு.
  3. பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1.
  4. சாட் மசாலா - ஒரு ஸ்பூன்.
  5. மிளகு தூள் - கால் ஸ்பூன்.
  6. மிளகாய் தூள் - 2 ஸ்பூன்.
  7. சீரகத்தூள் - 1/2 ஸ்பூன்.
  8. கரம் மசாலா தூள் - 1/2 ஸ்பூன்.
  9. இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன்.
  10. சீரகம் - ஒரு ஸ்பூன்.
  11. எலுமிச்சம் பழச் சாறு - 2 ஸ்பூன். 
  12. மைதா மாவு – 6 ஸ்பூன்
  13. பிரட் கிராம்ஸ் – சிறிதளவு.
  14. கார்ன் பிளவர் மாவு - 3 ஸ்பூன்.
  15. எண்ணெய் -  1/2 லிட்டர்.
  16. உப்பு - தேவையான அளவு.

 

Method: 

செய்முறை ;--

  1. ஒரு பாத்திரத்தில் 5 வேக வைத்த உருளைக்கிழங்கை எடுத்து துருவி வைத்துக்கொள்ளவும்.
  2. இதனுடன் பொடியாக நறுக்கிய சிறிதளவு மல்லி இலை,பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம்,ஒரு ஸ்பூன் சாட் மசாலா,மிளகு தூள் கால் ஸ்பூன்,2 ஸ்பூன் மிளகாய் தூள்,1/2 ஸ்பூன் சீரகத்தூள்,1/2 ஸ்பூன் கரம் மசாலா தூள்,உப்பு தேவையான அளவு,2 ஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது,ஒரு ஸ்பூன் சீரகம்,2 ஸ்பூன் எலுமிச்சம் பழச் சாறு மற்றும் 1/2 கப் பிரட் கிராம்ஸ் போட்டு இவை அனைத்தையும் நன்றாக கலந்து கொள்ளவும். 
  3. இதனுடன் ஒரு ஸ்பூன் மைதா மாவை போட்டு நன்றாக பிசைந்து கொள்ளவும்.
  4. இந்த கலவையில் சிறிதளவு எடுத்து லட்டு உருட்டுவது போல் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவும்,இதை போல் எல்லா உருண்டைகளையும் உருட்டி வைத்துக்கொள்ளவும்.
  5. ஒரு தட்டில் சிறிதளவு பிரட் கிராம்ஸ்சை  எடுத்துக் கொள்ளவும்.
  6. ஒரு பாத்திரத்தில் 5 ஸ்பூன் மைதா மாவு,3 ஸ்பூன் கார்ன் பிளவர் மாவு,தேவையான அளவு உப்பு போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து கொள்ளவும்.
  7. உருட்டி வைத்துள்ள உருண்டைகளை மைதாமாவு மற்றும் கார்ன் பிளவர் மாவு கரைசலில் போட்டு முக்கி எடுத்து  பின்னர் பிரட் கிராம்சில் பிரட்டி எடுத்து வைத்துக்கொள்ளவும். 
  8. இதே போல் மீதம் உள்ள  உருண்டைகளையும் தயார் செய்து ஒரு தட்டில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  9. அடுப்பில் கடாயை வைத்து 1/2 லிட்டர் எண்ணெய்யை ஊற்றவும்.
  10. எண்ணெய் சூடானவுடன் பிரட் கிராம்சில் பிரட்டி எடுத்து வைத்துள்ள உருண்டைகளை போட்டு நன்றாக பொரிக்கவும்.
  11. திருப்பி திருப்பி போட்டு நன்றாக பொரிக்கவும்.
  12. இதே போல் மீதம் உள்ள  உருண்டைகளையும் போட்டு பொரிக்கவும்.
  13. பொரித்த உருண்டைகளில் குத்தக்கூடிய குச்சிகளை  குத்தி வைத்துக்கொள்ளவும்.
  14. சுவையான உருளைக்கிழங்கு லாலிபாப் ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 20 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 20 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 22 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 22 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 20 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 20 hours ago