முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மணிப்பூர் விவகாரத்தை பார்லி.யில் காங்கிரஸ், இண்டியா கூட்டணி கட்சிகள் எழுப்பும்: ராகுல் காந்தி

வியாழக்கிழமை, 11 ஜூலை 2024      இந்தியா
Rahul 2024-06-28

புது டெல்லி, மணிப்பூர் விவகாரத்தை பாராளுமன்றத்தில் காங்கிரஸ், இண்டியா கூட்டணி கட்சிகள் எழுப்பும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யுமான ராகுல் காந்தி மணிப்பூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சமீபத்தில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இந்நிலையில், மணிப்பூர் மக்களின் நிலை குறித்து ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது,

வன்முறை வெடித்ததில் இருந்து நான் மணிப்பூருக்கு 3 முறை சென்றிருக்கிறேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நிலைமையில் எந்த முன்னேற்றமும் இல்லை. இன்றும் மாநிலம் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வீடுகள் எரிகின்றன. அப்பாவிகளின் உயிர்கள் ஆபத்தில் உள்ளன. 

ஆயிரக்கணக்கான குடும்பங்கள் நிவாரண முகாம்களில் வாழத் தள்ளப்படுகின்றனர். பிரதமர் மணிப்பூருக்கு நேரில் சென்று, மாநில மக்களின் பிரச்சனைகளைக் கேட்டறிந்து, அமைதிக்கு வேண்டுகோள் விடுக்க வேண்டும்.

இந்த அவலத்திற்கு முடிவு கட்ட மற்றும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க காங்கிரஸ் கட்சியும், இண்டியா  கூட்டணி கட்சிகளும் மணிப்பூரில் அமைதியின் அவசியத்தை பாராளுமன்றத்தில் முழு பலத்துடன் எழுப்பும் என தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து