முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டாஸ்மாக் கடைகளை குறைப்பதில் நடைமுறை சிக்கல் உள்ளது: அமைச்சர்

வியாழக்கிழமை, 11 ஜூலை 2024      தமிழகம்
Muthusamy 2023-07-27

ஈரோடு, டாஸ்மாக் கடைகளை குறைப்பதில் நடைமுறை சிக்கல் உள்ளதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். 

ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி கூறியதாவது:-

அண்டை மாநிலத்தில் இருந்து சாராயத்தை வாங்கி குடித்த 7 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 

புதுச்சேரியில் இருந்து வரும் எல்லா சாலைகளிலும் 24 மணி நேரமும் போலீசார் சோதனை நடத்த முடியாது. அனைவருக்கும் இது நன்றாக தெரிந்ததுதான். ஆக, காவல்துறை கண்காணிப்பை மீறி புதுச்சேரியில் இருந்து சாராயத்தை வாங்கி வந்துள்ளனர்.

500 மதுக்கடைகளை தமிழக அரசு மூடியுள்ளது. இன்னும் 1,000 கடைகளை மூடுவதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. டாஸ்மாக் கடைகளை குறைப்பதை உடனே செய்ய முடியாது; அதில் நடைமுறை சிக்கல் உள்ளது. 

மக்களை அதற்கு நாம் தயார் செய்ய வேண்டும். மதுப்பழக்கம் உள்ளவர்களை படிப்படியாக குறைக்க வேண்டும். மதுப்பழக்கத்தை இல்லாமல் செய்து விட வேண்டும் என்பதுதான் முதல்வரின் எண்ணமாக உள்ளது. 

மதுப்பழக்கம் உள்ளவர்களை அதில் இருந்து விடுபட வைக்கும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. படிப்படியாக மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்பதுதான் நமது நோக்கம். அதற்கான நடவடிக்கையை அரசு எடுக்கும். கள்ளுக்கடைகளை திறப்பது குறித்து தற்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது. இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து