முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சூப்பர் ஸ்நாக்ஸ்

Cooking time in minutes: 
20
Ingredients: 

சூப்பர் ஸ்நாக்ஸ் செய்யத் தேவையான பொருட்கள்.

  1. மைதா மாவு - 300 கிராம்.
  2. கோதுமை மாவு - 300 கிராம்.
  3. பேக்கிங் பவுடர் - ஒரு ஸ்பூன்.
  4. பட்டர் - 150 கிராம். 
  5. முட்டை -1.
  6. வெண்ணிலா எசன்ஸ் - ஒரு ஸ்பூன்.
  7. வினிகர் - 2 ஸ்பூன். 
  8. சர்க்கரை - 100 கிராம்.
  9. எண்ணெய் – 1/2 லிட்டர்.
  10. உப்பு - தேவையான அளவு.
Method: 

செய்முறை ;--

  1. ஒரு பாத்திரத்தில் 300 கிராம் மைதாமாவு,300 கிராம் கோதுமை மாவு,ஒரு ஸ்பூன் பேக்கிங் பவுடர் மற்றும் சிறிதளவு உப்பு போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.
  2. இதனுடன் 150 கிராம் பட்டரை போட்டு நன்றாக பிசைந்து கொள்ளவும்.
  3. இதனுடன் ஒரு முட்டையின் மஞ்சள் கருவை மட்டும் போட்டு கலந்து கொள்ளவும்.
  4. இதனுடன் ஒரு ஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ்,2 ஸ்பூன் வினிகர் ஊற்றி மாவை நன்கு பிசைந்து கொள்ளவும்.
  5. இதனுடன் தேவையான அளவு தண்ணீர்  ஊற்றி மாவை நன்கு பிசைந்து கொள்ளவும்.
  6. பிசைந்த மாவை இரண்டாக வெட்டி பிரித்து வைத்துக்கொள்ளவும்.
  7. பிரித்து வைத்துள்ள இரண்டு மாவு உருண்டைகள் மேல் ஒரு கவரை போட்டு மூடி வைத்து மாவை 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
  8. 15 நிமிடங்கள் கழித்து ஒரு உருண்டை மாவை எடுத்து ஒரு பலகையில் வைத்து சப்பாத்திக்கு தேய்ப்பது போல் மாவை தேய்த்து அதன் 4 ஓரத்தையும் நறுக்கி எடுத்து விடவும்.
  9. இரண்டுஓரத்தை மடக்கி எடுத்து கொள்ளவும். 
  10. இதை போல இன்னொரு மாவையும் தயார் செய்து ஒரு கவரை வைத்து மாவை மூடி 10 நிமிடங்கள் ஊற வைக்கவும்.  
  11. 10 நிமிடங்கள் கழித்து மாவை எடுத்து மீண்டும் தேய்த்துக்கொள்ளவும்.
  12. கட்டரை வைத்து மாவை சதுரம் சதுரமாக வரும் படி வெட்டி  வைத்துக்கொள்ளவும்.
  13. 3 பீஸை எடுத்து ஒன்றன் மேல் ஒன்றாக வைத்துக்கொள்ளவும்.
  14. அதன் ஓரத்தில் சிறிதளவு நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
  15. நறுக்கிய 3 பீஸ் மாவை கிராஸாக ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைத்துக்கொள்ளவும்.
  16. இதை போல எல்லா மாவையும் தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
  17. அடுப்பில் கடாய் வைத்து 1/2 லிட்டர் எண்ணெய்யை ஊற்றவும்,
  18. எண்ணெய் சூடானவுடன் தயார் செய்து எடுத்து வைத்துள்ள மாவை ஓவ்வொன்றாக எண்ணெய்யில் போட்டு நன்றாக பொரிக்கவும்.
  19. ஒரு கம்பியை வைத்து மாவை எண்ணெய்யில் அமுக்கி வைத்துக்கொண்டு பொரிக்கவும்.
  20. இல்லையெனில் பொரிக்கும் போது மாவு செட் தனித்தனியாக பிரிந்து வந்து விடும். 
  21. திருப்பி திருப்பி போட்டு மாவை அமுக்கி வைத்துக்கொண்டு நன்றாக வேக வைத்து அடுப்பில் இருந்து இறக்கி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  22. அடுப்பில் கடாய் வைத்து சிறிதளவு தண்ணிரை ஊற்றி, 100 கிராம் சர்க்கரையை போட்டு,நன்றாக கலந்து விட்டு சிறிது நேரம் கொதிக்க வைத்து,ஜீராவை தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
  23. இதில் சிறிதளவு ஜீராவை ஒரு ஸ்பூனில் எடுத்து பொறித்து வைத்துள்ள சூப்பர் ஸ்நாக்ஸ் மீது ஊற்றவும்.
  24. சுவையான சூப்பர் ஸ்நாக்ஸ் ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 20 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 20 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 22 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 22 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 20 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 20 hours ago