Idhayam Matrimony

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஐக்கிய அரபு அமைச்சர் சந்திப்பு

வியாழக்கிழமை, 25 ஜூலை 2024      தமிழகம்
CM-1-2024-07-25

சென்னை, சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை நேற்று ஐக்கிய அரபு அமீரக பொருளாதார துறை அமைச்சர் அப்துல்லா பின் தவுக் அல் மர்ரி சந்தித்து பேசினார். 

ஐக்கிய அரபு அமீரக பொருளாதாரத்துறை அமைச்சர் அப்துல்லா பின் தவுக் அல் மர்ரி அரசு முறை பயணமாக சென்னை வந்துள்ளார். நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்ற சர்வதேச வர்த்தக கருத்தரங்கில் அவர் பங்கேற்றார்.  இந்த கருத்தரங்கில் தொழில்முனைவோர் துறையின் ராஜாங்க அமைச்சர் ஆலியா பிந்த் அப்துல்லா அல் மஸ்ரூயி மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட ஐக்கிய அரபு அமீரக  அரசுக் குழுவினர் கலந்து கொண்டனர். 

இதில் சிறப்பு விருந்தினராக தமிழக தொழில், முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் தளவாடங்கள், மேம்பட்ட தொழில்கள், தொழில்முனைவோர், சிறு, நடுத்தர தொழில்கள், சுற்றுச்சூழல் மற்றும் முதலீடு ஆகிய துறைகளில் புதிய கூட்டு முயற்சிகள் மற்றும் ஒத்துழைப்பு பெறுவது குறித்த வாய்ப்புகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. 

இந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரக பொருளாதாரத்துறை அமைச்சர் அப்துல்லா பின் தவுக் அல் மர்ரி, நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். அப்போது அமீரக அமைச்சரை முதல்வர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து வரவேற்றார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், தமிழகத்தில் புதிய தொழில் முதலீடுகள் மேற்கொள்வது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து