முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருணை மதிப்பெண்களை ரத்து செய்து நீட் தேர்வு புதிய மதிப்பெண்கள் பட்டியலை வெளியிட்ட என்.ஐ.ஏ.

வியாழக்கிழமை, 25 ஜூலை 2024      இந்தியா
Neet 2023-04-20

Source: provided

புதுடில்லி: சுப்ரீம் கோரட் உத்தரவைத் தொடர்ந்து கருணை மதிப்பெண்களை ரத்து செய்து, நீட் தேர்வு மதிப்பெண் பட்டியலை தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. exams.nta.ac.in என்ற இணையதளத்தின் வாயிலாக, நீட் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வான நீட், கடந்த மே 5ம் தேதி நடந்தது. இதுவரை இல்லாத அளவாக 67 பேர், 720க்கு 720 மதிப்பெண் பெற்றனர். தேர்வில் 1,563 பேருக்கு கருணைப் மதிப்பெண் வழங்கப்பட்டது சர்ச்சையானது. தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்தக் கோரி வழக்குகள் தொடரப்பட்டன. வழக்குகளை சுப்ரீம் கோரட் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

மதிப்பெண் பட்டியல் அடங்கிய முழு ரிசல்டை என்.டி.ஏ., தன் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என சுப்ரீம் கோரட்ம் உத்தரவிட்டது. அதன்படி, கடந்த ஜூலை 20ம் தேதி தேர்வு மையங்கள் வாரியாக நீட் தேர்வு முடிவை தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. நேற்று (ஜூலை 25) கருணை மதிப்பெண்களை ரத்து செய்து, நீட் தேர்வு மதிப்பெண் பட்டியலை தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. exams.nta.ac.in என்ற இணையதளத்தின் வாயிலாக, நீட் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். 19ம் கேள்விக்கான கருணை மதிப்பெண்ணை ரத்து செய்து புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து