முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

முட்டை பாக்கெட்

Cooking time in minutes: 
20
Ingredients: 

முட்டை பாக்கெட் செய்யத் தேவையான பொருட்கள்.

  1. முட்டை  - 4.
  2. பிரட் - பாக்கெட்
  3. எண்ணெய் - 1/2 லிட்டர்.
  4. சீரகம் - ஒரு ஸ்பூன். 
  5. பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 3.
  6. பொடியாக நறுக்கிய 2 பெரிய வெங்காயம் - 2.
  7. இஞ்சி,பூண்டு விழுதை - ஒரு ஸ்பூன்.
  8. பொடியாக நறுக்கிய குடை மிளகாய்  - பாதி.
  9. சில்லி பிளக்ஸ் - ஒரு ஸ்பூன். 
  10. சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்.
  11. மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்.
  12. சாட் மசாலா - ஒரு ஸ்பூன்.
  13. உப்பு -தேவையான - அளவு.
  14. கரம் மசாலா -  1/4 டீஸ்பூன் 
  15. மைதா மாவு  - 1/2 கப்.
  16. சில்லி சாஸ்  - 1/2 டீஸ்பூன். 
  17. கான் பிளக்ஸ் – சிறிதளவு.
  18. மல்லி இலை – சிறிதளவு.
Method: 

 

செய்முறை ;--

  1. ஒரு பாத்திரத்தில் 4 முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கலந்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  2. அடுப்பில் கடாயை வைத்து 2 ஸ்பூன் எண்ணெய்யை ஊற்றவும்.
  3. எண்ணெய்  சூடானவுடன் ஒரு ஸ்பூன் சீரகம் மற்றும் பொடியாக நறுக்கிய 3 பச்சை மிளகாயை போட்டு வதக்கவும்.
  4. பொடியாக நறுக்கிய 2 பெரிய வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.
  5. இதனுடன் ஒரு ஸ்பூன் இஞ்சி,பூண்டு விழுதை போட்டு வதக்கவும்.
  6. இதனுடன் பொடியாக நறுக்கிய பாதி குடை மிளகாய் மற்றும் ஒரு ஸ்பூன் சில்லி பிளக்ஸ் போட்டு வதக்கவும்.
  7. இதனுடன் 1/2 டீஸ்பூன் சீரகத்தூள், 1/2 டீஸ்பூன் மிளகுத்தூள்,ஒரு ஸ்பூன் சாட் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு வதக்கவும்.
  8. இதனுடன் 1/4 டீஸ்பூன் கரம் மசாலா  போட்டு வதக்கவும்.
  9. இதனுடன் கலந்து வைத்துள்ள முட்டையை ஊற்றி,பொடியாக நறுக்கிய மல்லி  இலை சிறிதளவு போட்டு கலந்து விடவும்.
  10. இப்போது இதை அடுப்பில் இருந்து இறக்கி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  11. ஒரு தட்டில் ஒரு பாக்கெட்பிரட் துண்டுகளை எடுத்துக்கொண்டு அதன் ஓரத்தில் உள்ள பகுதியை நறுக்கி தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
  12. மீதம் உள்ள பிரட் துண்டுகளையும்  இதை போல் தயார் செய்து ஒரு தட்டில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  13. ஒரு பிரட் துண்டை எடுத்து சப்பாத்திக்கு தேய்ப்பது தேய்த்து வைத்துக்கொள்ளவும்.
  14. மீதம் உள்ள பிரட் துண்டுகளையும்  தயார் செய்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  15. ஒரு பிரட் துண்டை எடுத்து  முட்டை போட்டு வதக்கி வைத்துள்ள கலவையை சிறிதளவு வைத்து பிரட்டை மூடவும்.
  16. இதே போல் மீதம் உள்ள பிரட் துண்டுகளையும்  தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
  17. ஒரு பாத்திரத்தில் 1/2 கப் மைதா மாவு,1/2 டீஸ்பூன் சில்லி சாஸ்,உப்பு தேவையான அளவு போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து கொள்ளவும். 
  18. ஒரு பாத்திரத்தில் கான் பிளக்ஸ் எடுத்துக்கொள்ளவும்.
  19. பிரட் துண்டுகளை மைதா மாவு கலவையில்  முக்கி எடுத்து பின்னர் கான் பிளக்சில் போட்டு மாவின் எல்லா பக்கங்களிலும் கான் பிளக்ஸ் ஒட்டும் படி பிரட்டி எடுத்து  தயார் செய்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  20. இதே போல் மீதம் உள்ள பிரட் துண்டுகளையும் தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
  21. அடுப்பில் கடாய்யை வைத்து 1/2 லிட்டர் எண்ணெய்யை ஊற்றவும்.
  22. எண்ணெய்  சூடானவுடன்  தயார் செய்து வைத்துள்ள பிரட் துண்டுகளை  எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.
  23. திருப்பி திருப்பி போட்டு நன்றாக பொரிக்கவும்.
  24. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
  25. சுவையான முட்டை பாக்கெட்ரெடி.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago