முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2024 - பாரீஸ் ஒலிம்பிக் போட்டி: இந்திய ஹாக்கி அணி அரையிறுதிக்கு தகுதி

ஞாயிற்றுக்கிழமை, 4 ஆகஸ்ட் 2024      விளையாட்டு
Hockey 2024 08 04

Source: provided

கிரேட் பிரிட்டன் அணிக்கு எதிராக பெனால்டி ஷூட் அவுட் முறையில் நடந்த ஆட்டத்தில் 4 - 2 என்ற புள்ளி கணக்கில் இந்திய ஹாக்கி அணி காலிறுதிப்போட்டியில் வெற்றி பெற்றது. 2024 பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் இந்தியா - கிரேட் பிரிட்டன் அணிகளுக்கு இடையிலான காலிறுதிப்போட்டி நேற்று (ஆக. 4) நடைபெற்றது. முதல் பாதி ஆட்ட முடிவு வரையில், இரு அணிகளும் எந்தவொரு கோலும் அடிக்க முடியாத வகையில் ஆட்டம் இருந்தது. பின்னர் இந்தியாவின் ஹர்மன்பிரீத் சிங் ஒரு கோல் அடித்தார். கிரேட் பிரிட்டனின் மோர்ட்டன் ஒரு கோல் அடித்து அதனை சமன் செய்தார்.

நான்காவது காலிறுதி வரை விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், பெனால்டி ஷுட் அவுட் முறையில் இந்திய அணி 4 - 2 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்திய ஹாக்கி அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. இந்திய அணியின் கோல் கீப்பரான பி.ஆர்.ஸ்ரீஜேஸ், கிரேட் பிரிட்டனின் 11 கோல்களைத் தடுத்து இன்றைய ஆட்டத்தின் நட்சத்திர வீரரானார். அவருக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அரையிறுதிப் போட்டியில் ஜெர்மனி அல்லது அர்ஜென்டினா அணியை இந்திய அணி எதிர்கொள்ளவுள்ளது. கடந்த முறை டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி வெண்கலம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

____________________________________________________________________

தங்கம் வென்றார் ஜோகோவிச்

பாரீஸ் ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் முதல்முறையாக தங்கம் வென்று அசத்தியுள்ளார் செர்பியாவின் நோவக் ஜோகோவிச். விம்பிள்டன் சாம்பியன் அல்கராஸுடன் மோதிய இறுதிப் போட்டியில் 7-6 (7-3), 7-6 (7-2) என்ற செட்களில் வென்று அசத்தினார். இதுதான் ஜோகோவிச்சின் முதல் தங்கம். மேலும் ஆடவர் டென்னிஸ் ஒலிம்பிக்கில் வயதான வீரர் (37) ஒருவர் தங்கம் பெறுவதும் இதுவே முதல்முறை.

தனது வெற்றியில் 24 கிராண்ட்ஸ்லாம் பட்டத்துடன் தங்கத்தையும் சேர்த்துள்ளார். 2008இல் வெண்கலம் வென்ற ஜோகோவிச்சுக்கு இது 2ஆவது பதக்கம் என்பதும் குறிப்பிடத்தக்கது. விம்பிள்டனில் இரண்டு முறை அலகராஸுடம் தோல்வியுற்ற ஜோகோவிச் இதில் வெற்றி பெற்றது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை கொடுத்துள்ளது.

____________________________________________________________________

மனு பாக்கருக்கு கவுரவம்

33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் 206 நாடுகளில் இருந்து 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா இதுவரை 3 வெண்கலம் மட்டுமே வென்றுள்ள நிலையில் 9-வது நாளான மயிரிழையில் ஒரு பதக்கம் நழுவிப்போனது. துப்பாக்கி சுடுதலில் பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவின் இறுதிசுற்று நடந்தது. தகுதி சுற்றின் மூலம் தேர்வான இந்தியாவின் மனு பாக்கர் உள்பட 8 வீராங்கனைகள் பதக்கத்துக்கு மோதினர். ஏற்கனவே 10 மீட்டர் ஏர் பிஸ்டல், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் பதக்கம் வென்று இருந்த அரியானாவைச் சேர்ந்த மனு பாக்கர் இந்த பிரிவிலும் பதக்கம் வென்று 'ஹாட்ரிக்' சாதனை படைப்பார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர்.

முடிவில் மனு பாக்கரும், ஹங்கேரியின் வெரோனிகா மாஜேரும் தலா 28 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் சமனில் இருந்தனர். அவர்களில் யாரை வெளியேற்றுவது என்பதை முடிவு செய்ய தனியாக சூட்-ஆப் சுற்று நடத்தப்பட்டது. இதில் இருவருக்கும் தலா 5 வாய்ப்பு வழங்கப்பட்டது. மனு பாக்கர் தனது வாய்ப்பில் 3 புள்ளி எடுத்தார். ஆனால் வெரோனிகா 4 புள்ளி எடுத்து டாப்-3 இடத்திற்குள் நுழைந்தார். மனு பாக்கர் 28 புள்ளிகளுடன் 4-வது இடத்தை பிடித்தார். 22 வயதான மனு பாக்கர் இந்த போட்டியிலும் பதக்கத்தை வென்று இருந்தால் ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் 3 பதக்கத்தை உச்சிமுகர்ந்த முதல் இந்தியர் என்ற புதிய சரித்திரத்தை படைத்து இருப்பார்.

போட்டிக்குப் பின்னர் பேசிய அவர், "இறுதிப்போட்டியில் எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சித்தேன். ஆனால் அது போதுமானதாக இல்லை. இரண்டு பதக்கம் வென்றது மகிழ்ச்சி தான். ஆனால் தற்போது இந்த பந்தயத்தில் 4-வது இடத்தை பிடித்தது சிறந்த நிலை இல்லை. பாரீஸ் ஒலிம்பிக்கில் எனக்குரிய போட்டிகள் முடிந்து விட்டன. என்னுடன் பணியாற்றிய பயிற்சி குழுவினர், உதவியாளர்கள் மற்றும் எனக்கு ஆதரவாக இருந்து உற்சாகப்படுத்திய அனைவருக்கும் நன்றி. 2028-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் அனேகமாக இதை விட சிறப்பாக முடிப்பேன் என்று நம்புகிறேன்" என்று கூறினார்.

ஒலிம்பிக் நிறைவு விழாவில் இந்திய அணிக்கு தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி செல்ல விரும்புகிறீர்களா என்று கேட்ட போது, 'இது ஒரு வாழ்நாள் கவுரவமாகும். அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தால் அதனை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வேன்' என்று மனு பாக்கர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் பாரீஸ் ஒலிம்பிக் நிறைவு விழாவில் இரட்டை ஒலிம்பிக் பதக்கம் வென்ற மனு பாக்கர் இந்தியாவின் தேசிய கொடியை ஏந்த உள்ளதாக இந்திய ஒலிம்பிக் சங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

____________________________________________________________________

அரையிறுதியில் லக்சயா தோல்வி

பாரிஸ் ஒலிம்பிக் பாட்மின்டனில் இந்தியாவின் லக்சபா சென் அரையிறுதியில் தோல்வி அடைந்தார். வெண்கல பதக்கத்திற்கானே போட்டியில் அவர் விளையாட உள்ளார். அரையிறுதியில் உலகின் இரண்டாம் நிலை வீரரான விக்டர் அக்செல்சன்னை எதிர் கொண்ட லக்சயா சென் போராடி தோல்வி அடைந்தார். இன்று ( ஆக.,05) வெண்கல பதக்கத்திற்கு நடக்கும் போட்டியில் லக்சயா சென், மலேஷியாவின் லீ ஜி ஜியா என்ற வீரரை எதிர்கொள்கிறார்.

____________________________________________________________________

காலிறுதியில் லவ்லினா தோல்வி

ஒலிம்பிக் போட்டியில் மகளிர் குத்துச்சண்டையில் இந்திய வீராங்கனை லவ்வினா காலிறுதியில் அதிர்ச்சி தோல்வியடைந்தார். கடந்த ஒலிம்பிக்கில் குத்துச்சண்டையில் வெண்கலம் வென்ற லவ்லினா இம்முறையும் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. நேற்று (ஆக.,04) நடந்த காலிறுதியில் உலகின் முதல்நிலை வீராங்கனையான சீனாவின் லி குயானை எதிர்கொண்டார். இந்த போட்டியில் கடுமையாக போராடி தோல்வி அடைந்தார். லி குயான் 4- 1 என்ற புள்ளிக்கணக்கில் லவ்லினாவை வீழ்த்தினார்.

____________________________________________________________________

தடை தாண்டும் ஓட்டம்: பாருல் தோல்வி

பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் தடை தாண்டும் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை பாருல் செளத்ரி தோல்வி அடைந்தார். 2024 பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் பெண்களுக்கான 3000 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம் நேற்று (ஆக. 4) நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் பாருல் செளத்ரி பங்கேற்றார். பெண்களுக்கான 5000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தோல்வி அடைந்ததால், தடை தாண்டும் ஓட்டத்தில் பாருல் மீது நம்பிக்கை ஏற்பட்டது.

அதன்படி, தடை தாண்டும் ஓட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன்மூலம் 3 மீட்டரை 9:23.39 விநாடிகளில் கடந்தார். இந்தத் தொடரில் இது அவரின் சிறப்பான ஆட்டமாகும். எனினும் பட்டியலில் அவர் 8வது இடத்தை மட்டுமே பிடித்தார். கென்யாவின் பேட்ரிஸ் சேப்கோயேச் 9:13.56 விநாடிகளில் கடந்து முதலிடத்தைப் பிடித்தார். முதல் 5 இடங்களைப் பிடித்த வீராங்கனைகள் மட்டுமே அடுத்த சுற்றுக்கு செல்லும் தகுதி பெற்றவர்கள் என்பதால், பாருல் செளத்ரி ஒலிம்பிக்கிலிருந்து வெளியேறினார்.

____________________________________________________________________

பீச் வாலிபாலால் விவாதம்

பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் நடைபெற்ற பெண்கள் பீச் வாலிபால் ஆட்டத்தில் ஸ்பெயின் - எகிப்து அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் ஸ்பெயின் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் இரு அணி வீராங்கனைகளும் அணிந்திருந்த உடை சமூக வலைதளத்தில் காரசார விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெயின் வீராங்கனைகள் பிகினி உடை அணிந்து போட்டியில் களமிறங்கிய நிலையில், எகிப்து வீராங்கனைகள் ஹிஜாப் அணிந்து போட்டியில் பங்கேற்றனர். இது சமூக வலைதளங்களில் காரசார விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து