முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவை செம்மொழி பூங்கா பணிகளை டிசம்பரில் முடிக்க திட்டம்: அமைச்சர் கே.என்.நேரு

திங்கட்கிழமை, 5 ஆகஸ்ட் 2024      தமிழகம்
KN-Nehru 2023 04 01

Source: provided

கோவை : கோவையில் செம்மொழி பூங்கா பணிகள் டிசம்பரில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். 

கோவை காந்திபுரம் மத்திய சிறை அருகே ரூ.133 கோடி மதிப்பீட்டில் செம்மொழி பூங்கா பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை நேற்று அமைச்சர்கள்  கே.என்.நேரு மற்றும்  முத்துசாமி ஆகியோர் பணிகளை ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம்  அமைச்சர் நேரு கூறியதாவது, 

கோவையில் செம்மொழி பூங்கா அமைக்கும் பணிகளுக்கு தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டினார். பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. டிசம்பர் மாதத்திற்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பொறியாளர், உதவி பொறியாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.முதற்கட்டமாக 2,500 பணியிடங்கள் அண்ணா பல்கலைக் கழகத்துடன் இணைந்து நிரப்பப்பட உள்ளது. இதில் 85 சதவீதம் தேர்வு மூலம், 15 சதவீதம் காலியாக உள்ள பணியிடங்கள் நேரடி தேர்வு மூலம் நிரப்பப்படும்.

கோவை மாநகராட்சியில் 333 தீர்மானங்களை 10 நிமிடத்தில் நிறைவேற்றியதில் பிரச்சினை இல்லை. அனைத்து தீர்மானங்களையும் பரிசீலித்து மக்களின் தேவைக்காக நிறைவேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

கட்டிட வரைப்பட அனுமதிக்கு ஆன்லைன் மூலம் வழங்கும் திட்டத்தால் கட்டண உயர்வு என்பது சரியல்ல. நிலத்தின் மதிப்பு அடிப்படையில் நிர்ணயக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து