முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் ரூ.340 வரை பாட புத்தகங்களின் விலை உயர்ந்தது

திங்கட்கிழமை, 12 ஆகஸ்ட் 2024      தமிழகம்
Book 2024-01-21

Source: provided

சென்னை : தமிழகத்தில் பாடப்புத்தகங்களின் விலையை உயர்த்தி பாடநூல் கழகம் அறிவித்துள்ளது. அதிகபட்சமாக ரூ.340 வரை உயர்ந்துள்ளது.

பள்ளி மாணவர்களுக்காக தமிழ்நாடு பாடநூல் கழகம் ஆண்டுதோறும் சுமார் 5 கோடி பாடப் புத்தகங்களை அச்சிட்டு விநியோகம் செய்து வருகிறது. இதில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இந்த பாடப் புத்தகங்கள் விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பாடப் புத்தங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

அதேபோல, போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களும் இந்த பாடப் புத்தகங்களை வாங்குகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் பாடப் புத்தகங்களின் விலையை உயர்த்தி பாடநூல் கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, 1-ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.160 உயர்ந்து, ரூ.550-க்கு விற்பனையாகிறது. 2-ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.150 உயர்ந்து ரூ.530-க்கு விற்பனையாகிறது.

3-ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.190 உயர்ந்து ரூ.620-க்கு விற்பனையாகிறது. 4-ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.180 உயர்ந்து, ரூ.650-க்கு விற்பனையாகிறது. 5-ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.200 உயர்ந்து ரூ.710-க்கு விற்பனையாகிறது. 6-ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.320 உயர்ந்து ரூ.1,110க்கு விற்பனையாகிறது. 7-ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.340 உயர்ந்து ரூ.1,200 விற்பனையாகிறது.

8-ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.310 உயர்ந்து ரூ.1,000 உயர்ந்துள்ளது. 9-ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.340 உயர்ந்து ரூ.1,110க்கு விற்பனையாகிறது. 10-ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.340 உயர்ந்து, ரூ.1,130க்கு விற்பனையாகிறது. காகிதங்களின் விலை உயர்வு, அச்சடிப்பதற்கான கட்டணம் உயர்வு உள்ளிட்ட காரணங்களால் பாடப் புத்தகங்களின் விலையை உயர்த்தியுள்ளதாக பாடநூல் கழகம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து