முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நம் நாட்டை வல்லரசாக உறுதியேற்போம்: எடப்பாடி பழனிசாமி சுதந்திர தின வாழ்த்து

வியாழக்கிழமை, 15 ஆகஸ்ட் 2024      தமிழகம்
Edappadi 2020 11-16

சென்னை, நம் நாட்டை வல்லரசாக உறுதியேற்போம் என்று எடப்பாடி பழனிசாமி சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் 78- வது சுதந்திரதின விழா நாடு முழுவதும் நேற்றுகோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி பல்வேறு கட்சித் தலைவர்கள் நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்திய திருநாட்டின் 78வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தில், ஆங்கிலேயர் ஆதிக்கத்தை எதிர்த்து களம் கண்டு தியாகத்தின் விளைவாக நம் நாட்டிற்கு சுதந்திரம் பெற்றுத் தந்த விடுதலை வேள்விக்கொண்ட தீரர்களை நினைவுகூர்வதுடன், நம் நாட்டின் அடிப்படை விழுமியங்களான ஜனநாயகம், கூட்டாட்சி, சமத்துவம் ஆகியவற்றைப் பேணிக்காக்கவும், அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பெற்ற வல்லரசாக நம் நாட்டை கட்டமைக்கவும் உறுதியேற்போம். இந்தியத் திருநாடு வாழியவே..! தமிழ்நாடு வாழியவே..! அனைவருக்கும் இனிய சுதந்திரதின நல்வாழ்த்துகள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து