முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிய கிரிக்கெட் தலைவராக மெஹ்சின் நக்வி தேர்வாகிறார்

திங்கட்கிழமை, 2 செப்டம்பர் 2024      விளையாட்டு
Pak-1 2024-09-02

Source: provided

இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா ஐசிசி தலைவராக ஒருமனதாக தேர்வாகியுள்ளார். டிசம்பர் மாதத்தில் இருந்து ஐசிசி தலைவர் பொறுப்பை ஏற்க இருக்கிறார். பிசிசிஐ செயலாளரான ஜெய் ஷா ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராகவும் இருந்து வருகிறார். தற்போது ஐசிசி தலைவராக தேர்வு செய்யப்பட்டதால் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவராக இருக்கும் மெஹ்சின் நக்வி அடுத்த ஆசிய கிரிக்கெட் சங்க தலைவர் பதவியை ஏற்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பதவிக்கான போட்டியில் அவர் முன்னிலையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வருட இறுதியில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வருட இறுதியில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டம் நடைபெற இருக்கிறது. அப்போது அடுத்த இரண்டு வருடத்திற்கு தலைவராக நியமிக்கப்படுவது உறுதியாகும்.

பிசிசிஐ-யின் செயலாளர் பதவியையும் ராஜினாமா செய்ய இருப்பதால், புதிய செயலாளராக அருண் ஜெட்லியின் மகன் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து