முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி பிரம்மோற்சவம்: கருட சேவை நாளில் இரு சக்கர வாகனங்களுக்கு தடை

செவ்வாய்க்கிழமை, 3 செப்டம்பர் 2024      ஆன்மிகம்
Tirupati 2024-09-03

திருப்பதி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவத்தில் கருட சேவையை முன்னிட்டு அக்டோபர் 7-ம் தேதி இரவு 9 மணி முதல், 9-ம் தேதி காலை 6 மணி வரை திருமலைக்கு செல்லும் இரண்டு மலைப்பாதைகளிலும், இரு சக்கர வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி  ஏழுமலையான் கோவிலில் அக்டோபர் 4-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது. முக்கிய நிகழ்வான கருட சேவை, அக்டோபர் 8-ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வருகை தருவார்கள் என்பதால், திருமலை திருப்பதி தேவஸ்தானம் விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

திருமலைக்கு ஏராளமான வாகனங்களில் பக்தர்கள் வருகை தருவார்கள். எனவே, வாகனங்களை நிறுத்துவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதே சமயம் பக்தர்களின் பாதுகாப்புக்காக வழக்கமான நடைமுறைகளும் பின்பற்றப்படுகின்றன. 

அவ்வகையில், கருட சேவையை முன்னிட்டு அக்டோபர் 7-ம் தேதி இரவு 9 மணி முதல், 9-ம் தேதி காலை 6 மணி வரை திருமலைக்கு செல்லும் இரண்டு மலைப்பாதைகளிலும், இரு சக்கர வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இதை கவனத்தில் கொண்டு தேவஸ்தானத்திற்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து