முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொடர்ந்து அதிரடி காட்டும் இங்கி. வீரர் ஜோ ரூட், 3 ஆண்டுகளில் சச்சின் சாதனையை முறியடிக்க வாய்ப்பு

புதன்கிழமை, 4 செப்டம்பர் 2024      விளையாட்டு
England 2024-02-16

Source: provided

லண்டன் : தொடர்ந்து அதிரடி காட்டும் ஜோ ரூட், 3 ஆண்டுகளில் சச்சின்  சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளது.

அதிக சதங்கள்... 

இங்கிலாந்தின் கிரிக்கெட் வீரர் ஜோ ரூட் 30 வயதுக்கு முன்பு 177 இன்னிங்ஸில் 17 சதங்கள் மட்டுமே அடித்திருந்தார். தற்போது, 30 வயதுக்குப் பிறகு 88 இன்னிங்ஸில் 17 சதங்கள் அடித்துள்ளார். 30 வயதுக்கு முன்பு ஆடியதைவிட தற்போது இரண்டு மடங்கு சிறப்பாக விளையாடி வருகிறார். இங்கிலாந்துக்காக அதிக சதங்கள் அடித்தவர்கள் (34) பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். ஜோ ரூட் அசத்தலாக விளையாடி வருகிறார்.

923 புள்ளிகள்... 

இதற்கு முன்பாக ஜோ ரூட் அதிகபட்சமாக 923 புள்ளிகளை 2022இல் பெற்றுள்ளார். இதை விரைவில் கடந்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஐசிசி தரவரிசையில் 922 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார் ஜோ ரூட். கேன் வில்லியம்சனைவிட 63 புள்ளிகள் அதிகமாக இருக்கிறார். இதுவரை யாரும் 950 புள்ளிகளைக்கூட தொட்டதில்லை (பிராட் மேனை தவிர்த்து) என்பது குறிப்பிடத்தக்கது.

சாதனையை முறியடிக்க...

3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-0 என முன்னிலையில் உள்ள இங்கிலாந்து அணிக்கு 3ஆவது போட்டி செப்.6ஆம் தேதி தொடங்குகிறது. அடுத்து பாகிஸ்தான், நியூசிலாந்துடனும் போட்டிகள் இருக்கின்றன. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரேட்டிங் (புள்ளிகள்) பெற்றவர்கள் வரிசையில் டான் பிராட்மேன் 961 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார். ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் (947) இரண்டாம் இடத்தில் இருக்கிறார். அதனால், பிராட் மேன் சாதனயை முறியடிக்க ஜோ ரூட்டுக்கு அதிகமான வாய்ப்புகள் இருக்கின்றன.கடந்த 3 வருடங்களாக ஜோ ரூட் சிறப்பாக விளையாடி வருகிறார். 2021இல் இருந்து 3,000 அல்லது 4,000 ரன்கள் அடித்த ஒரே வீரர் ஜோ ரூட் மட்டுமே. ஜனவரி 1, 2021 முதல் டெஸ்ட்டில் 4,554 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 56.92. 

லாராவின் சாதனை...

ஜோ ரூட் இதுவரை 12,377 ரன்கள் எடுத்துள்ளார். சமீபத்தில் பிரைன் லாரா சாதனையை முறியடித்தார். தற்போது அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் 7ஆவது இடத்தில் இருக்கிறார். முதலிடத்தில் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் 15,921 ரன்களில் இருக்கிறார். இதே வேகத்தில் ரூட் விளையாடினால் இன்னும் 3 ஆண்டுகளில் சச்சின் சாதனையையும் முறியடிக்க வாய்ப்பிருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து