எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, பி.எம். ஸ்ரீ திட்டம் மூலம் கற்றலில் புதிய தொழில்நுட்பங்கள் புகுத்தப்படும். கற்றல், கற்பித்தல் திறன் மேம்படும். தமிழக அரசு முதலில் இத்திட்டத்தை ஏற்பதாக அறிவித்தது. ஆனால் தற்போது ஏற்க மறுக்கிறது என்றும் தமிழக அரசு பள்ளிகளில் கல்வித்தரம் மிக மோசமாக உள்ளது என்றும் கவர்னர் ஆர்.என். ரவி வேதனை தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கவர்னர் மாளிகையில் நடைபெற்ற எண்ணித் துணிக நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துரையாடல் நடத்தினார். பின்னர் கவர்னர் ஆர்.என். ரவி பேசியதாவது,
நாடு சுதந்திரம் அடைவதற்கு முன் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பல நாடுகள், பல ராஜாக்கள் இருந்தாலும் மக்கள் ஒற்றுமை உணர்வுடன் வாழ்ந்துள்ளார்கள். 120 ஆண்டுகளுக்கு முன் எனது பாட்டி, பீகாரின் ஒரு கிராமத்தில் இருந்து பல நாடுகளைக் கடந்து ராமேஸ்வரத்துக்கு வந்துள்ளார்.
காரணம், ராமேஸ்வரம் தன்னுடையது, ஒவ்வொருவருக்குமானது என்ற எண்ணம் அவருக்கு இருந்தது. அப்படித்தான் பல புண்ணிய தலங்கள் நாடு முழுவதும் உள்ளன. ராமேஸ்வரம், ராமநாதபுரம் மன்னருக்கானது அல்ல. அது பாரதம் முழுவதும் வசிக்கும் மக்களுக்கானது.
ராஜாக்கள், அவற்றின் பாதுகாவலர்கள் மட்டுமே. இதே போல்தான் காசியும். இப்படித்தான் இந்த நாடு ஒரே நாடாகவும், அதே நேரத்தில் பல ராஜாக்கள் ஆளக்கூடியதாகவும் இருந்துள்ளது. பக்திக்காக மட்டுமல்ல, கல்விக்காகவும் ஒரு இடத்தில் இருந்து மக்கள் வேறு ஒரு இடத்துக்குச் சென்று வந்தார்கள்.
1,500 ஆண்டுகளுக்கு முன், பல்லவ இளவரசர் 500 பேருடன் பீகாரின் நாளாந்தா சென்றார். அங்கு கல்வி பயின்றார். பின்னர், அவரே ஒரு குருவாக உருவெடுத்தார். அவரே போதி தர்மரானார். யாரும், யாரையும் தடுக்கவில்லை.
நீங்கள் வேறு ஒரு நாட்டைச் சேர்ந்தவர் என கூறவில்லை. பல்லவ இளவரசர் மாமல்லபுரத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர் நாளந்தா தன்னுடையது என்று எண்ணினார். அதே போல்தான் ஆதிசங்கரர். நினைத்துப் பாருங்கள் அவர் நாடு முழுவதும் பயணித்திருக்கிறார். ஒருவரும் அவரை தடுத்ததில்லை.
சமூகம் அவரை வரவேற்றது. மக்கள் வரவேற்றார்கள். தற்போதைய அரசியலைக் கொண்டு இந்தியாவை புரிந்து கொள்ள முடியாது. இது ஒரு ராஷ்ட்ரம். ராஷ்ட்ரம் என்பது நாடு என்பதை கடந்த ஒன்று.
கல்விதான் மனிதர்களின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது. தமிழகம் கல்வியில் சிறந்து விளங்க மிகச்சிறந்த அடித்தளம் அமைத்தவர் முன்னாள் முதல்வர் காமராஜர். அவர்தான் மாநிலத்தின் பல பகுதிகளிலும் பள்ளிகளை அமைத்தார். தொலைதூரம் சென்று கல்வி கற்கும் நிலையை மாற்றினார்.
துரதிருஷ்டவசமாக அந்த அடித்தளம் இன்று பலவீனப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளிகளில்தான் 60 சதவீத மாணவர்கள் படிக்கிறார்கள். அரசு பள்ளிகளில் கல்வித் தரம் மிகவும் கீழே சென்றுள்ளது. தேசிய சராசரியைவிட அது குறைவாக உள்ளது.
அரசுப் பள்ளிகளில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 75 சதவீத மாணவர்களால், இரட்டை இலக்க எண்களைக்கூட புரிந்து கொள்ள முடியவில்லை. 40 சதவீத மாணவர்களால் அவர்களது பாடப்புத்தகங்களைக்கூட படிக்க முடியவில்லை. ஒரு ஆய்வு இதனை தெரிவிக்கிறது.
கற்பித்தல் குறைபாடே இதற்குக் காரணம். ஆனால், எந்த கட்டுப்பாடும் இல்லாமல் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்படுகிறது. அவர்கள் பட்டப்படிப்பு படித்து முடிக்கிறார்கள். இது நாட்டுக்கு ஆபத்தான நிலையை ஏற்படுத்தக்கூடியது.
பி.எம். ஸ்ரீ திட்டம் மூலம் கற்றலில் புதிய தொழில்நுட்பங்கள் புகுத்தப்படும். கற்றல், கற்பித்தல் திறன் மேம்படும். தமிழக அரசு முதலில் இத்திட்டத்தை ஏற்பதாக அறிவித்தது. ஆனால் தற்போது ஏற்க மறுக்கிறது. ஏற்கும் மாநிலங்களுக்கு நிதி வழங்கப்படுகிறது.
சான்றிதழ்களை வைத்துக் கொண்டு பல இளைஞர்கள் வேலை கிடைக்காமல் தவிக்கிறார்கள். கல்வியில் ஏற்பட்டிருக்கும் இந்த பின்னடைவை நாம் மறுக்க முடியாது. தமிழகம் சந்தித்து வரும் மற்றொரு பெரிய பிரச்சனை போதைப் பொருள்கள்.
ஆனால், போதைப் பொருள்கள் பெரிய பிரச்சினை இல்லை என்று மறுக்கக்கூடிய நிலை இங்கே இருக்கிறது. கோகெய்ன், ஹெராயின், மெத் என ரசாயன போதைப் பொருள்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. பள்ளிகள், கல்லூரிகளில் இத்தகைய போதைப் பொருள்கள் விநியோகிக்கப்படுகின்றன.
இதனை நாம் மறுப்பதால் பயனில்லை. இது நடக்கிறது என்பதை ஏற்றுக் கொண்டு, இதற்கு தீர்வு காண வேண்டும். ஆசிரிய சமூகம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். மாணவர்கள் தவறான பாதையில் சென்றால், அது குறித்து பெற்றோர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
ஆசிரியர் தினம் இதற்கான உறுதியை எடுப்பதற்கானதாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், மணவர்களுக்கு எதிர்காலம் இல்லாமல் போய்விடும். மாணவர்களை பெரிதாக கனவு காண வைக்க வேண்டும். இதற்கான பொறுப்பை ஆசிரியர்கள் ஏற்க வேண்டும்.
பல மாணவர்களிடம் பெரிய கனவுகள் இல்லை. தங்கப் பதக்கம் வென்ற மாணவர்கள்கூட, சராசரி வேலை குறித்த கனவையே கொண்டிருக்கிறார். பலரின் கனவுகள் சிறியதாக உள்ளன. ஆலமரத்தின் விதையைப் போன்றவர்கள் மாணவர்கள். ஆனால், பலர் அதனை உணராமல் போய் விடுகிறார்கள் என தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்4 months 5 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்4 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.5 months 3 hours ago |
-
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டி-20: ஹாட்ரிக் வெற்றி பெறுமா இந்தியா?
27 Jan 2025ராஜ்கோட் : இங்கிலாந்துக்கு எதிராக ஹாட்ரிக் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும்ஆர்வத்தில் இந்திய அணி உள்ளது.
-
அமெரிக்க புதிய அதிபர் டிரம்புடன் பிரதமர் மோடி டெலிபோனில் பேச்சு
27 Jan 2025புதுடெல்லி : இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் உடன் டெலிபோனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
-
சாம்பியன்ஸ் டிராபி தொடர்: ஜஸ்ப்ரீத் பும்ரா விலகல்?
27 Jan 2025மும்பை : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கி மார்ச் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது.
-
பள்ளிக்கல்வித்துறையில் 47,013 பணியிடங்கள் நிரந்தரமானது : தமிழக அரசு அறிவிப்பு
27 Jan 2025சென்னை : பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர், ஆசிரியர் இல்லாத 47,013 பணியிடங்களை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
-
சனாதனம் குறித்த பேச்சு: துணை முதல்வர் உதயநிதிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்
27 Jan 2025புதுடெல்லி : சனாதனம் குறித்த உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 3 மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
-
2024-ம் ஆண்டின் சிறந்த ஐ.சி.சி. டெஸ்ட் கிரிக்கெட் வீரர் விருதை வென்றார் பும்ரா
27 Jan 2025துபாய் : ஐசிசி-யின் சிறந்த டெஸ்ட் விருதை வென்ற 6-வது இந்திய வீரர் என்ற சாதனையை பும்ரா படைத்துள்ளார்.
மூன்று பெயர்கள்...
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-01-2025.
28 Jan 2025 -
குழந்தைகள் முன்னேற்றக் கழகம் விமர்சனம்
28 Jan 2025அரசியல்வாதியான யோகிபாபுவுக்கு இரண்டு மனைவிகள். இருவருக்கும் தலா ஒரு ஆண் வாரிசுகள்.
-
வெற்றிமாறன் தயாரிக்கும் Bad Girl
28 Jan 2025வெற்றிமாறன் தயாரிப்பில், அஞ்சலி சிவராமன், சாந்தி பிரியா, ஹ்ரிது ஹருண், 'TeeJay' அருணாசலம் மற்றும் சரண்யா ரவிச்சந்திரன் நடிப்பில், வெற்றிமாறனின் உதவி இயக்குனர் வர்ஷா பரத
-
Mr.ஹவுஸ் கீப்பிங் விமர்சனம்
28 Jan 2025பொறியியல் கல்லூரி மாணவரான நாயகன் ஹரி பாஸ்கர், தனது கல்லூரியில் படிக்கும், லாஸ்லியாவை காதலிப்பதாக சொல்ல, லாஸ்லியா நிராகரித்து விடுகிறார்.
-
சட்டவிரோத குடியேற்ற விவகாரத்தில் சரியானதை மோடி செய்வார்: ட்ரம்ப்
28 Jan 2025வாஷிங்டன்: சட்டவிரோத குடியேற்ற விவகாரத்தில் சரியானதை மோடி செய்வார், நாங்கள் விவாதித்து வருகிறோம் என்று ட்ரம்ப் கூறினார்.
-
சட்டவிரோத குடியேற்ற விவகாரத்தில் சரியானதை மோடி செய்வார்: ட்ரம்ப்
28 Jan 2025வாஷிங்டன்: சட்டவிரோத குடியேற்ற விவகாரத்தில் சரியானதை மோடி செய்வார், நாங்கள் விவாதித்து வருகிறோம் என்று ட்ரம்ப் கூறினார்.
-
பணக்கார்களுக்கான கடன் தள்ளுபடியை தடுக்க சட்டம் பிரதமருக்கு கெஜ்ரிவால் கோரிக்கை
28 Jan 2025புதுடெல்லி: பெரும் செல்வந்தர்களுக்கான கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதை தடுக்கும் வகையில் நாடுதழுவிய அளவில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு அரவிந்த் கெஜ
-
முல்லைப்பெரியாறு அணை குறித்த அச்ச உணர்வு காமிக்ஸ் கதைகளில் வருவதை போல் உள்ளது- சுப்ரீம் கோர்ட்
28 Jan 2025புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணை தொடர்பான வழக்கில் மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தையும் ஒரு தரப்பாக சேர்க்க கோரி கேரளாவை சேர்ந்த ஜாய் ஜோசப் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில்
-
வந்தே பாரத் ரயில்கள் மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் இயக்கம்
28 Jan 2025புதுடெல்லி : வந்தே பாரத் ரெயில்கள் 130 கி.மீட்டர் வேகத்தில் இயக்கி புதிய சகாப்தத்தை ஏற்படுத்தி உள்ளது இந்திய ரெயில்வே.
-
கிழக்கு இந்தியா நாட்டின் வளர்ச்சி இயந்திரம்: பிரதமர்
28 Jan 2025புவனேஸ்வர்: கிழக்கு இந்தியாவை நாட்டின் வளர்ச்சி இயந்திரமாக கருதுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
ஐ.எஸ். இயக்கத்துக்கு ஆள் சேர்ப்பு: சென்னையில் ஒருவர் கைது
28 Jan 2025சென்னை : சென்னையில் ஐ.எஸ்., தீவிரவாத இயக்கத்திற்கு ஆள் சேர்த்தவர் கைது செய்யப்பட்டார்.
-
தை அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் கோவில் நடை இன்று திறந்திருக்கும்
28 Jan 2025ராமேசுவரம் : தை அமாவாசையை முன்னிடடு ராமேசுவரம் கோவில் நடை இன்று முழுவதும் திறக்கப்பட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
வக்பு வாரிய திருத்த மசோதா: சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரும் எதிர்க்கட்சிகள்
28 Jan 2025புதுடெல்லி : வக்பு வாரிய திருத்த மசோதா தொடர்பாக இன்று அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
-
அமெரிக்க பாதுகாப்பு படைகளில் மாற்றுப் பாலினத்தவருக்கு தடை அதிபர் டொன்ல்ட் டிரம்ப் கையெழுத்து
28 Jan 2025வாஷிங்டன்: அமெரிக்காவில் பாதுகாப்புப் படைகளில் மாற்றுப் பாலினத்தவருக்குத் தடை விதிக்க வகை செய்யும் உத்தரவில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார்.
-
வட இந்தியாவில் கடுங்குளிர்: பொதுமக்கள் கடும் அவதி
28 Jan 2025புதுதில்லி : டெல்லி உள்பட வட இந்தியாவின் பெரும்பாலான இடங்களில் கடுங்குளிர் வாட்டி வதைக்கிறது. இதனால் மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
-
வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு அனுமதி
28 Jan 2025கோவை : வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
-
அஜித்குமாருக்கு பத்மபூஷன்: நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து
28 Jan 2025சென்னை : நடிகர் அஜித்துக்கு பத்மபூஷன் விருதுகிடைத்ததுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
21 சமூகநீதி போராளிகளுக்கு ரூ.5 கோடியில் மணிமண்டபம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
28 Jan 2025விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் மறைந்த முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமியின் நினைவரங்கம் மற்றும் 21 சமூகநீதி போராளிகளுக்கு மணிமண்டபத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின
-
ஜனாதிபதி உரையுடன் வரும் 31-ம் தேதி பாராளுமன்ற பட்ஜெட் தொடர் தொடக்கம்
28 Jan 2025புதுடெல்லி : பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 31-ம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் உரையாற்றுகிறார்.