எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மாற்றுத் திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் உலகம் முழுவதும் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் ஆண்கள் கிளப் எறிதல் எப். 51 (பதக்க சுற்று) போட்டியில் இந்திய வீரர் தரம்பிர் 34.92 மீட்டர் தூரம் வீசி தங்கப் பதக்கத்தை வென்றார். மற்றொரு இந்திய வீரர் பிரணவ் சூர்மா 34.59 மீட்டர் தூரம் வீசி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இதன் மூலம் 2024 பாரீஸ் பாரா ஒலிம்பிக்கில் இந்தியா இதுவரை 5 தங்கம், 9 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 24 பதக்கங்களை வென்றுள்ளது. அதோடு, பதக்கப்பட்டியலில் ஜப்பானை(21 பதக்கங்கள்) பின்னுக்கு தள்ளி இந்தியா 13 இடத்திற்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இறுதிக்கு சிம்ரன் தகுதி
மாற்றுத் திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் உலகம் முழுவதும் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது. இந்த தொடரில் இந்தியா இதுவரை 5 தங்கம், 9 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 24 பதக்கங்களைப் பெற்று 13-வது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற பெண்களுக்கான 100 மீட்டர் டி-12 ஓட்டப்பந்தயம் அரையிறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை சிம்ரன் சர்மா 12.33 வினாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து 2-வது இடம்பிடித்தார். இதன்மூலம் இறுதிப் போட்டிக்கு அவர் தகுதி பெற்றார்.
உள்ளூர் போட்டி: ரிஷப் கருத்து
உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவது மிகவும் முக்கியம் என ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது: துலிப் கோப்பையில் விளையாடவுள்ளது சிறப்பான உணர்வைக் கொடுப்பதாக நினைக்கிறேன். ஏனெனில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கார் விபத்தில் சிக்கிய பிறகு, எப்போது இந்திய அணிக்காக விளையாடப் போகிறேன் என்று அடிக்கடி யோசிப்பேன். கடந்த 6 மாதங்களில் ஐபிஎல் தொடரில் விளையாடியுள்ளேன். இந்திய அணிக்காக விளையாடி உலகக் கோப்பையும் வென்றுள்ளோம். உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்பது சிறுவயதிலிந்தே எனது ஆசையாக இருந்து வந்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு துலிப் கோப்பையில் விளையாடவுள்ளேன்.
உள்ளூர் போட்டிகளில் விளையாடுவது என்பது மிகவும் முக்கியம். அதிலும் குறிப்பாக துலிப் கோப்பை போன்ற தொடர்களில் விளையாடுவது மிகவும் முக்கியம். ஒரு கிரிக்கெட்டராக அதிகப் படியான பயிற்சிகள் தேவைப்படும். உள்ளூர் போட்டிகளில் மூத்த வீரர்கள் விளையாடும்போது, இளம் வீரர்கள் அவர்களிடத்திலிருந்து நிறைய கற்றுக் கொள்ள முடியும். அனுபவம் வாய்ந்த வீரர்களுடன் விளையாடும் இளம் வீரர்களுக்கு புதிய உத்வேகம் கிடைக்கும் என்றார்.
ஜோஸ் பட்லர் விலகல்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் விலகியுள்ளார். ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் முதலில் நடைபெறுகிறது. முதல் டி20 போட்டி செப்டம்பர் 11 ஆம் தேதி சௌத்தாம்டனில் நடைபெறுகிறது.
காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் விலகுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் இங்கிலாந்து அணியை பில் சால்ட் கேப்டனாக வழிநடத்துவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக விலகியுள்ள ஜோஸ் பட்லருக்குப் பதிலாக அணியில் ஆல்ரவுண்டர் ஜேமி ஓவர்டன் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்திய அணி காலிறுதிக்கு தகுதி
பாரீஸில் நடைபெற்றுவரும் பாராலிம்பிக்ஸ் பாரா வில்வித்தை போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய அணி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. பாரா வில்வித்தையில் இந்திய அணி சார்பில் கலந்து கொண்டுள்ள தங்கப்பதக்கம் வென்ற ஹர்விந்தர் சிங் மற்றும் பூஜா ஜத்யன் இருவரும் காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளனர். ஹர்விந்தர் சிங் மற்றும் பூஜா ஜத்யன் இருவரும் ஆஸ்திரேலியாவின் டேமோன் கெண்டன் ஸ்மித்-அமண்டா ஜென்னிங்ஸ் ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினர்.
ஆடவருக்கான பாரா வில்வித்தையில் இந்திய அணிக்கு முதல் தங்கம் வென்று தந்தவரான ஹர்விந்தர் சிங் பூஜாவுடன் இணைந்துள்ளதால் இரண்டாவது பதக்கத்தை வெல்வார் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்த இணை முதல் சுற்றில் 31-18 மற்றும் 35-24 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்றது. இரண்டாவது சுற்றில் 27-33 மற்றும் 24-33 என்ற புள்ளிகள் கணக்கில் பின்னடைவை சந்தித்தாலும் முடிவில் 16-5 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினர்.
ஒலிம்பிக் வீராங்கனை உயிரிழப்பு
கென்யாவில் வசித்து வந்த உகாண்டா தடகள வீராங்கனை ரெபேக்கா செப்டேஜி அவரது காதலனால் தாக்கப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பலத்த காயமடைந்த அவர் உடலில் 75% தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பரிதாபமாக வியாழக்கிழமை உயிரிழந்தாக உகாண்டா தடகள கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக்கில் தொலைதூர ஓட்டப்பந்தயத்தில் 44 வது இடத்தைப் பிடித்த வீராங்கனையான ரெபேக்கா செப்டேஜி, மேற்கு டிரான்ஸ் நஸோயா கவுண்டியில் உள்ள அவரது வீட்டில் காதலனுடன் ஏற்பட்ட தகராறில் தீவைத்து எரிக்கப்பட்டார்.
ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் போது, ரெபேக்கா செப்டேஜியின் காதலன், டிக்சன் என்டிமா பெட்ரோலை வாங்கி, அவள் மீது ஊற்றி, எரித்துள்ளார். இந்தச் சம்பவத்தில் என்டிமாவுக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டன. கவுண்டியின் பல தடகளப் பயிற்சி மையங்களுக்கு அருகில் இருக்கும் வகையில் டிரான்ஸ் நஸோயாவில் ரெபேக்கா செப்டேஜி நிலம் ஒன்றை வாங்கியுள்ளார். இதனால், கருத்து வேறுபாட்டால் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுபற்றி உகாண்டா தடகள கூட்டமைப்பு எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்தப் பதிவில், “குடும்ப வன்முறையால் துரதிருஷ்டவசமாக உயிரிழந்த எங்கள் தடகள வீராங்கனை ரெபேக்கா செப்டேஜி நேற்று (செப் 5) அதிகாலை மரணமடைந்ததை அறிவிப்பதில் நாங்கள் மிகுந்த வருத்தமடைகிறோம். கூட்டமைப்பாக, இதுபோன்ற செயல்களை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்4 months 5 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்4 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.5 months 3 hours ago |
-
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டி-20: ஹாட்ரிக் வெற்றி பெறுமா இந்தியா?
27 Jan 2025ராஜ்கோட் : இங்கிலாந்துக்கு எதிராக ஹாட்ரிக் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும்ஆர்வத்தில் இந்திய அணி உள்ளது.
-
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் குறித்த தகவலால் பரபரப்பு
27 Jan 2025கொழும்பு: விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மக்கள் மத்தியில் தோன்றுவார் என புதிய தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழகத்தில் 7-வது முறையும் தி.மு.க.வே ஆட்சி அமைக்கும் தொண்டர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்
27 Jan 2025சென்னை: தமிழகத்தில் 7வது முறையும் தி.மு.க.,வே ஆட்சி அமைக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு
27 Jan 2025மேட்டூர்: மேட்டூர் அணை நீர்வரத்து 403 அடியாக சற்று குறைந்துள்ளது.
-
100 நாள் வேலைத்திட்ட நிலுவை தொகை: மத்திய அமைச்சர் நிர்மலாவிடம் தங்கம் தென்னரசு நேரில் மனு
27 Jan 2025சென்னை: 100 நாள் வேலைத் திட்டத்தில் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கவேண்டிய ரூ.1,056 கோடி நிலுவைத் தொகையை விடுவிக்கக்கோரி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து தமிழ்நாட
-
வரிகளை உயர்த்தினால்....அமெரிக்க அதிபருக்கு சவால் விடுத்த கனடா
27 Jan 2025கனடா: கனடா மீதான இறக்குமதி வரிகளை அமெரிக்கா உயர்த்தினால் அவர்களுக்கு வழங்கும் எரிசக்தி விநியோகத்தைத் துண்டிக்க இருப்பதாக கனடா அரசு தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் வரும் 30, 31-ம் தேதிகளில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
27 Jan 2025சென்னை: தமிழகத்தில் வரும் 30 மற்றும் 31-ம் தேதிகளில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக
-
அரசுப் பள்ளிகளே நமது பெருமையின் அடையாளம் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
27 Jan 2025சென்னை: அரசுப் பள்ளிகள் நம் பெருமையின் அடையாளம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
-
எதிர்க்கட்சிகளின் பல திருத்தங்கள் நிராகரிப்பு: வக்ஃப் திருத்த மசோதா இறுதி செய்தது பார்லி., கூட்டுக்குழு
27 Jan 2025புதுடெல்லி: வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவை பாராளுமன்றக் கூட்டுக்குழு இறுதி செய்துள்ளது.
-
வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வு: சுடுமண்ணால் செய்யப்பட்ட மனித உருவத்தின் கால் பகுதி கண்டெடுப்பு
27 Jan 2025விருதுநகர்: வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வில் சுடுமண்ணால் செய்யப்பட்ட மனித உருவ கால் பகுதி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
-
ஈரோடு கிழக்கு பூத் ஸ்லிப் வழங்கும் பணி தொடக்கம்
27 Jan 2025ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக வீடு வீடாக பூத் ஸ்லிப் வழங்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியுள்ளது.
-
டெல்லி சட்டசபை தேர்தலை முன்னிட்டு கெஜ்ரிவாலின் 15 வாக்குறுதிகள்
27 Jan 2025புதுடெல்லி : டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் வாக்குறுதிகளாக 15 உத்தரவாதங்களை ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று வெளிய
-
பல்கலை. மாணவி விவகாரம்: சுப்ரீம கோர்ட் முக்கிய உத்தரவு
27 Jan 2025புதுடெல்லி : சென்னையில் அமைந்துள்ள அண்ணா பல்கலை.
-
தமிழகம் முழுவதும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் புதிய ஆட்டோ கட்டணம் : குறைந்தபட்சம் ரூ.50 ஆக நிர்ணயம்
27 Jan 2025சென்னை : தமிழகம் முழுவதும் ஆட்டோ கட்டணம் வருகிற 1-ம் தேதி முதல் உயருகிறது.
-
அமெரிக்க புதிய அதிபர் டிரம்புடன் பிரதமர் மோடி டெலிபோனில் பேச்சு
27 Jan 2025புதுடெல்லி : இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் உடன் டெலிபோனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
-
சாம்பியன்ஸ் டிராபி தொடர்: ஜஸ்ப்ரீத் பும்ரா விலகல்?
27 Jan 2025மும்பை : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கி மார்ச் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது.
-
பள்ளிக்கல்வித்துறையில் 47,013 பணியிடங்கள் நிரந்தரமானது : தமிழக அரசு அறிவிப்பு
27 Jan 2025சென்னை : பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர், ஆசிரியர் இல்லாத 47,013 பணியிடங்களை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
-
சிதம்பரத்தில் கவர்னருக்கு எதிப்பு: இன்டியா கூட்டணியினர் கைது
27 Jan 2025சிதம்பரம் : சிதம்பரத்தில் கவர்னருக்கு எதிப்பு தெரிவித்த 100-க்கும் மேற்பட்ட இன்டியா கூட்டணியை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.
-
டிரம்ப் எச்சரிக்கைக்கு அடிபணிந்ததால் கொலம்பியா மீதான இறக்குமதி வரி தடையை நீக்கம்: அமெரிக்கா
27 Jan 2025அமெரிக்கா: அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டவர்களை கொலம்பிய அரசு ஏற்றுகொண்டதைத் தொடர்ந்து அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்டிருந்த ஏற்றுமதிக்கான வரி மற்றும் தடையை அமெர
-
சனாதனம் குறித்த பேச்சு: துணை முதல்வர் உதயநிதிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்
27 Jan 2025புதுடெல்லி : சனாதனம் குறித்த உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 3 மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
-
சென்னையில் நாளை தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம்
27 Jan 2025சென்னை : சென்னையில் வரும் ஜன.29-ம் தேதி, தி.மு.க.
-
நாசாவல் விண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட மகா கும்பமேளா படங்கள் வெளியீடு
27 Jan 2025அமெரிக்கா: சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து எடுக்கப்பட்ட மகா கும்பமேளா புகைப்படங்களை நாசா விண்வெளி வீரர் ஒருவர் பகிர்ந்துள்ளார்.
-
2024-ம் ஆண்டின் சிறந்த ஐ.சி.சி. டெஸ்ட் கிரிக்கெட் வீரர் விருதை வென்றார் பும்ரா
27 Jan 2025துபாய் : ஐசிசி-யின் சிறந்த டெஸ்ட் விருதை வென்ற 6-வது இந்திய வீரர் என்ற சாதனையை பும்ரா படைத்துள்ளார்.
மூன்று பெயர்கள்...
-
நவாஸ்கனி எம்.பி மீதான வழக்கு: ரத்து செய்யக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்
27 Jan 2025சென்னை : இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனி மீதான வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
-
நடிகர் சைப் அலிகான் வழக்கில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு தொடர்பு: காவல் துறை சந்தேகம்
27 Jan 2025மும்பை : சைப் அலி கான் வழக்கில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு தொடர்பு உள்ளதாக மும்பை போலீசார் சந்தேகிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.