முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரான்சில் பள்ளிகளில் செல்போன் பயன்படுத்த மாணவர்களுக்கு தடை

வெள்ளிக்கிழமை, 6 செப்டம்பர் 2024      உலகம்
Cell-Phone 2024-09-06

பாரீஸ், 11 முதல் 15 வயது வரையிலான மாணவர்கள் தாங்கள் பயிலும்  பள்ளிக்கு செல்போன் கொண்டு செல்லக்கூடாது என்று பிரான்ஸ் அரசு தடை விதித்துள்ளது. 

இன்றைய இளம் தலைமுறையினரிடையே செல்போன் என்பது ஆறாவது விரல் போன்று ஒட்டியே காணப்படுகிறது. தொடர்ந்து இதனை பயன்படுத்துவதால் மாணவர்களுக்கு தூக்கமின்மை, கவனக்குறைவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதனை தவிர்க்க உலக நாடுகள் பலவும் முயன்று வருகின்றன. 

அந்த வகையில் சுவீடன் அரசாங்கம் 2 வயதுக்குட்பட்ட குழந்தைகள் செல்போன்களை பயன்படுத்த பெற்றோர் அனுமதிக்கக் கூடாது என அறிவுறுத்தியது. இந்த நிலையில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்தும் நேரத்தை குறைக்க பிரான்சில் புதிய திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தி உள்ளது. 

அதன்படி 11 முதல் 15 வயது வரையிலான மாணவர்கள் பயிலும் நடுநிலைப்பள்ளிக்கு செல்போன் கொண்டு செல்லக் கூடாது. மீறினால் மாணவர்களின் செல்போன்களை ஆசிரியர்கள் பறிமுதல் செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இதனையடுத்து உயர்நிலை வகுப்புகளுக்கு இந்த திட்டத்தை விரிவுபடுத்துவது குறித்து பிரான்ஸ் அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து