முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேற்றுமைகள் இருந்தாலும் நாம் ஒற்றுமையுடன் முன்னேற வேண்டும்: இந்தோனேசிய மசூதியில் போப் பிரான்சிஸ் உரை

வெள்ளிக்கிழமை, 6 செப்டம்பர் 2024      உலகம்
Pope-Francis 2024-09-06

ஜகார்த்தா, தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய மசூதியான இந்தோனேசியாவின் இஸ்திக்லால் மசூதியில் போப் பிரான்சிஸ் உரையாற்றினார். அப்போது அனைவரும் கடவுளை நோக்கிச் செல்லும் வழியில், வேற்றுமைகளை இருந்தாலும் ஒற்றுமையுடன் முன்னேற வேண்டும் என்று அவர் தெரிவித்தார். 

ஆசிய பசிபிக் நாடுகளில் போப் பிரான்சிஸ் 12 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி தனது சுற்றுப் பயணத்தின் மூன்றாவது நாளில் இந்தோனேசியா சென்றடைந்த அவர், தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய மசூதியான இஸ்திக்லால் மசூதிக்கு சென்றார். 

அங்கு மசூதியின் இமாம் ஆன நசுருதீன் உமர் போப் பிரான்சிஸை வரவேற்றார். அங்கு இந்தோனேசிய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆறு மதங்களைச் சேர்ந்த தலைவர்களும் இருந்தனர். போப் பிரான்சிஸை வரவேற்றுப் பேசிய நசுருதீன் தனது உரையில், புவிவெப்பமாயதல் மற்றும் பருவநிலை மாறுபாடு உள்ளிட்ட பிரச்சினைகளை மேற்கோள் காட்டி பேசினார். 

இதன் பிறகு பேசிய போப் பிரான்சிஸ், நாம் அனைவரும் சகோதரர்கள், யாத்ரீகர்கள். அனைவரும் கடவுளை நோக்கிச் செல்லும் வழியில், வேற்றுமைகளை இருந்தாலும் ஒற்றுமையுடன் முன்னேற வேண்டும். போர்கள் போன்ற மனிதகுலத்தின் எதிர்காலத்தை அச்சுறுத்தும் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொள்ளும் பொறுப்பை நாம் ஏற்கவேண்டும் என்று தெரிவித்தார். 

பின்னர் பார்வையற்ற சிறுமி ஒருவர் குர்ஆனில் இருந்து சில வசனங்களையும், பைபிளில் இருந்து சில வசனங்களை படித்துக் காட்டியதை போப் பிரான்சிஸ் மற்றும் நசுருதீன் கேட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து