முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விநாயகர் சதுர்த்தி: பிள்ளையார்பட்டி கோவிலில் தீர்த்தவாரி உற்சவம் கோலாகலம்

சனிக்கிழமை, 7 செப்டம்பர் 2024      ஆன்மிகம்
pillayarpatti-karpaga-vinayagar

திருப்பத்தூர், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில்  நேற்று தீர்த்தவாரி உற்சவம் கோலாகலமாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். 

சிவகங்கை மாவட்டம்  திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீகற்பகவிநாயகர் கோவில் சதுர்த்தி பெருவிழா கடந்த 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம் மாலை சந்தனக்கபாப்பு சிறப்பு அலங்காரத்தில் மூலவர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் நடந்த ஆவணி தேரோட்டம் நடைபெற்றது. இதில், சண்டிகேஸ்வரர் தேரை பெண்கள் மட்டும் இழுத்தனர். விழாவின் 10-ம் நாளான நேற்று காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு மூலவர் தங்கக்கவசம் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

பின்னர் விநாயகப்பெருமான் தங்கமூஷிக வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் சப்பரத்திலும் கோவில் குளம் முன்பு எழுந்தருளினர். பின்னர் குளத்தின் படிக்கட்டில் அங்குசதேவருக்கு 16 வகை திரவியங்களால் சிறப்பு அபிஷேக, தீபாதனை நடந்தது. பின்னர் சிவாச்சாரியர், அங்குசத்தேவருடன் குளத்தில் 3 முறை மூழ்கி எழ, விநாயகர் சதுர்த்தி தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. தொடர்ந்து விநாயகர் வீதி உலா நடந்தது. மதியம் உச்சிகால பூஜையில் மூலவருக்கு 18 படி அரிசியால் செய்யப்பட்ட ராட்சத கொழுக்கட்டை படைக்கப்பட்டு சிறப்பு தீபாரதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து