முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கனில் போலியோ முகாம் நடத்த தலிபான் அரசு தடை

செவ்வாய்க்கிழமை, 17 செப்டம்பர் 2024      உலகம்
Afghanistan 2024-03-17

Source: provided

காபூல் : ஆப்கானிஸ்தானில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்த தாலிபான்கள் அரசு தடை விதித்துள்ளது. 

குழந்தைகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் போலியோ நோய் உலகின் பெரும்பாலான நாடுகளில் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. ஆனால், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய இருநாடுகளில் மட்டும் போலியோ நோய் தற்போதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. 

போலியோ நோயை தடுக்க அந்நாடுகளில் சொட்டு மருத்து முகாம்கள் நடத்த ஐ.நா. பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. ஆனால், போலியோ சொட்டு மருந்து மேற்கத்திய நாடுகளால் உருவாக்கப்பட்ட சதி என ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் பெரும்பாலானோர் கருதி வருகின்றனர். 

மேலும், குழந்தை பிறப்பை தடுக்கவே இந்த மருந்து கொடுக்கப்படுவதாகவும் சிலர் கருதுகின்றனர். இதனால், பாகிஸ்தானில் போலியோ தடுப்பூசி முகாம்களை குறிவைத்து அவ்வப்போது பயங்கரவாத தாக்குதல்களும் அரங்கேறி வருகின்றன. 

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் நடப்பு மாதத்திற்கான போலியோ சொட்டு மருந்து முகாம் இன்னும் சில நாட்களில் ஐ.நா. அமைப்பால் தொடங்கப்பட இருந்தது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்த அந்நாட்டை ஆளும் தலிபான்கள் அரசு தடை விதித்துள்ளது.  போலியோ சொட்டு மருத்து முகாம்களுக்கு தடை விதித்ததற்கான காரணம் குறித்து ஆப்கானிஸ்தான் அரசு எந்தவித விளக்கமும் தெரிவிக்கவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து