முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண் மருத்துவர் கொலை: பதவி விலகக்கோரிய மம்தாவுக்கு எதிரான மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

செவ்வாய்க்கிழமை, 17 செப்டம்பர் 2024      இந்தியா
Mamata 2024-09-14

Source: provided

கொல்கத்தா : மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி பதவி விலகக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட், முதல்வரை பதவி விலகுமாறு உத்தரவிடுவது எங்கள் பணி அல்ல என்றும் கருத்து தெரிவித்துள்ளது.

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியில் இருந்த பயிற்சி பெண் டாக்டர், கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் சஞ்சய் ராய் என்ற நபரை கைது செய்தனர்.

தொடர்ந்து கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவின்படி, இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த விவகாரத்தில், டாக்டர்களுக்கு பாதுகாப்பு கோரியும், பெண் டாக்டருக்கு நீதி வேண்டும் என கோரியும், சம்பவ நாளில் இருந்து கொல்கத்தா நகரில் பயிற்சி டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, கொல்கத்தாவில் பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதையடுத்து, மேற்கு வங்காளத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி பதவி விலக வேண்டும் எனக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கறிஞர் ஒருவர் மனுதாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி ஜே.பி.பர்திவாலா மற்றும் நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. 

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், "இது அரசியல் மன்றம் அல்ல. ஒரு அரசியல் தலைவரைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை தெரிந்து கொள்வதற்காக நாங்கள் இங்கு வரவில்லை. மருத்துவர்களின் கோரிக்கைகள் குறித்து நாங்கள் விசாரித்து வருகிறோம். முதல்வரை பதவி விலகுமாறு உத்தரவிடுவது எங்கள் பணி அல்ல" என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து