முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி: இந்திய அணி வெற்றி பெற ரவீந்திர ஜடேஜா யோசனை

சனிக்கிழமை, 21 டிசம்பர் 2024      விளையாட்டு
Jadeja 2024-03-17

Source: provided

மெல்போர்ன் : பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நன்றாக விளையாட வேண்டும் என இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார்.

சமநிலையில்... 

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இதுவரை மூன்று போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. தற்போது இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் தொடரில் சமநிலையில் உள்ளன. 

டாப் ஆர்டர்....

5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் பாக்ஸிங் டே போட்டி மெல்போர்னில் நடைபெறவுள்ள நிலையில், பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நன்றாக விளையாட வேண்டும் என ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

மிக முக்கியம்...

இது தொடர்பாக அவர் பேசியதாவது: வெளிநாடுகளில் விளையாடும்போது, அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடுவது மிகவும் முக்கியம். அதிலும் குறிப்பாக, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவில் விளையாடும்போது, அவர்கள் மிகவும் நன்றாக விளையாட வேண்டும். முன்வரிசை ஆட்டக்காரர்கள் சிறப்பாக விளையாடத் தவறும்போது, பின்வரிசை ஆட்டக்காரர்களின் மீதான பொறுப்பும் அழுத்தமும் அதிகரிக்கிறது. மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் டாப் ஆர்டர் மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நன்றாக செயல்பட்டு ரன்கள் குவிப்பார்கள் என நம்புகிறேன் என்றார். மழையால் பாதிக்கப்பட்ட மூன்றாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிய ரவீந்திர ஜடேஜா முதல் இன்னிங்ஸில் 77 ரன்கள் குவித்தது முக்கிய காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து