முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பஞ்சாப் அணிக்காக ஐ.பி.எல். கோப்பை வெல்வதே இலக்கு : ஸ்ரேயாஷ் ஐயர் உறுதி

சனிக்கிழமை, 21 டிசம்பர் 2024      விளையாட்டு
Shreyas -Ishaan-Kishan

Source: provided

சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் கோப்பை வெல்வதே முக்கியமான இலக்கு என ஸ்ரேயாஸ் ஐயர் கூறியுள்ளார்.

ரூ.26.75 கோடிக்கு... 

ஐபிஎல் ஏலத்தில் இந்திய வீரர் ஸ்ரேயாஷ் ஐயரை பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ.26.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரராக மாறி ஸ்ரேயாஷ் ஐயர் சாதனை படைத்துள்ளார். அதனால், இவர்தான் பஞ்சாப் அணிக்கு கேப்டனாக செயல்படுவாரென எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நேர்காணல் ஒன்றில் ஸ்ரேயாஷ் ஐயர் கூறியதாவது:

நல்ல நட்புறவு...

ரசிகர்கள் மனநிலை என்னவாக இருக்குமென புரிந்துகொள்ள முடிகிறது. ரிக்கி பயிற்சியாளராக இருக்கிறார். அவருடன் ஏற்கனவே நல்ல நட்புறவு இருக்கிறது. பல விஷயங்களில் நாங்கள் இருவரும் சேர்ந்து குழுவாக சிந்தித்து செயல்படுவோம். அதை முதல் போட்டியில் இருந்தே செயல்படுத்துவோம்.

வெல்ல வேண்டும்...

பஞ்சாப் அணியில் இணைந்தது மகிழ்ச்சி. அணியில் சேர்வதற்கு காத்திருக்க கடினமாக இருக்கிறது. இந்தாண்டு 2 கோப்பைகளை வென்றிருக்கிறேன். என்னுடைய முதன்மையான நோக்கம் ஐபிஎல் கோப்பையை பஞ்சாப் அணிக்காக வெல்ல வேண்டும். சையத் முஷ்டக் அலி கோப்பை வென்றது நம்பமுடியாத உணர்வைக் கொடுத்தது. இதற்காக கடினமான உழைத்திருக்கிறோம். அணியின் வீரர்கள் சிறப்பாக உழைத்தார்கள் என்றார். தற்போது விஜய் ஹசாரோ கோப்பையில் விளையாடி வருகிறார்.

அகமதாபாத்தில்... 

இதற்கிடையே விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் போட்டி இந்தியாவில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த சீசனுக்கான 32-வது விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஜெய்ப்பூர், மும்பை, அகமதாபாத், ஐதராபாத், விசாகப்பட்டினம் உள்ளிட்ட நகரங்களில் நேற்று தொடங்கியது. இதில் அகமதாபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை - கர்நாடகா அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற கர்நாடகா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து மும்பையின் தொடக்க ஆட்டக்காரர்களாக அங்கிரிஷ் ரகுவன்ஷி மற்றும் ஆயுஷ் மத்ரே ஆகியோர் களம் இறங்கினர்.

சூர்யகுமார் யாதவ்...

இதில் அங்கிரிஷ் ரகுவன்ஷி 6 ரன்னில் ஆட்டம் இழந்தார். தொடர்ந்து ஹர்திக் தாமோர் களம் இறங்கினார். ஹர்திக் தாமோர்-ஆயுஷ் மத்ரே இணை நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தது. நிதானமாக ஆடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இதில் ஆயுஷ் மத்ரே 78 ரன்னிலும், ஹர்திக் தாமோர் 84 ரன்னிலும் அவுட் ஆகினர். தொடர்ந்து களம் இறங்கிய சூர்யகுமார் யாதவ் 20 ரன்னில் அவுட் ஆனார்.

இருவரும் சிக்சர்கள்...

இதையடுத்து ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஷிவம் துபே ஜோடி சேர்ந்தனர். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கர்நாடகாவின் பந்துவீச்சில் இருவரும் சிக்சர் மழை பொழிந்தனர். இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் மும்பை 4 விக்கெட்டை மட்டும் இழந்து 382 ரன்கள் குவித்தது. மும்பை தரப்பில் ஸ்ரேயாஸ் ஐயர் 55 பந்தில் 114 ரன்னும், ஷிவம் துபே 36 பந்தில் 63 ரன்னும் எடுத்து களத்தில் இருந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து